உங்கள் காதலி சிம்ம ராசியில் பிறந்தவரா..? அப்ப நீங்க தான் ரொம்ப அதிஷ்டசாலி!

ஒவ்வொரு நபருக்கும் ஒருவிதமான குணாதிசயம் இருப்பது இயல்பு. ஆனால், ஒருசில விஷயங்கள் அவரவர் இராசிக்கு ஏற்பது பொதுவான செயல்பாடுகள் இருக்கும்.

இது ஒருசிலர் மத்தியில் வேறுப்படலாமே தவிர பெரும்பாலும் இந்த ஒருமித்த செயல்பாடுகள் இருக்கத் தான் செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அந்த வகையில் சிம்ம இராசி பெண்களுக்கு என்று ஒருமித்த சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றன.

இவை காதலில் எப்படி இருக்கிறது. இதனால், இவர்களை காதலிக்கும் ஆண்களுக்கு என்ன நன்மை என்பவை பற்றி தான் நாம் இங்கு இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்…

அறிவுக்களஞ்சியம்

சிம்ம இராசி பெண்களிடம் பொதுவாகவே அறிவுக் கூர்மை அதிகம். மற்றும் படைப்பாற்றல், நகைச்சுவை ஆற்றல் கொண்டவர்களாக இவர்கள் திகழ்வார்கள். இவர்கள் எங்கிருந்தலும் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.

கனவு வாழ்க்கை மெய்ப்படும்

நாம் புத்தகங்கள் மற்றும் படங்களில் பார்த்த அந்த கனவு வாழ்க்கையை இவர்கள் மெய்ப்பிப்பார்கள். இதுப் போன்ற காதல் அமைவது எல்லாம் மிகவும் கடினமாகும்.

அதிகமான காதல்

சிம்ம இராசி பெண்கள் மிகவும் அதிகமாக காதலிப்பார்கள். நீங்கள் ஒரு மடங்கு எதிர்பார்த்தால், அவர்களிடம் இருந்து ஆயிரம் மடங்கு எதிரொலிக்கும்.

ஒரே மாதிரி இருக்காது

சிம்ம இராசி பெண்கள் ஒரே மாதிரியான சுழற்சியான வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள். தினம், தினம், தினம் தீபாவளி போல, இவர்கள் புதியதாய் வாழ விரும்புவர்கள்.

அழகு தேவதைகள்

உடை உடுத்துவதில் இருந்து, தாங்கள் செய்யும் சிறு, சிறு விஷயங்களிலும் அழகாக ஈடுபடுபவர்கள் சிம்ம இராசி பெண்கள்.

திடீர் சுவாரஸ்யங்கள்

திடீர், திடீரென உங்களை ஆச்சரியப்படுத்த சிம்ம இராசி பெண்கள் தவறவே மாட்டார்கள். அது பரிசாக மட்டுமல்லாமல், முத்தங்கள், கட்டிப்பிடி வைத்தியங்கள் மற்றும் நீங்கள் என்றோ எதிர்பார்த்த விஷயங்கள் என எதுவாக கூட இருக்கலாம்.

திட்டமிட்ட வாழ்க்கை

சிம்ம இராசி பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும், தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல்கள் இருக்கும். எனவே, இவர்கள் குழம்பவும் மாட்டார்கள், உங்களை குழப்பவும் மாட்டார்கள்.


மகிழ்விக்கும் மோகினி

உங்களது மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் இவர்கள் செய்வார்கள். உங்கள் மகிழ்ச்சியே தங்களது மகிழ்ச்சியாக கருதும் குணம் கொண்டவர்கள் சிம்ம இராசி பெண்கள்

அவநம்பிக்கை

இவர்களுக்கு அவநம்பிக்கை மிகவும் குறைவாக தான் இருக்கும். மற்றும் யாரையும் சந்தேகப்படமாட்டார்கள். ஆதலால், சிம்ம இராசி பெண்களை காதல் செய்வீர், மகிழ்ச்சியாக இருப்பீர்!

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post