இந்த புகைப்படத்தில ஒரு படம் செலக்ட் பண்ணுங்க... உங்க குணாதிசயத்த நாங்க சொல்கிறோம்!!

இது லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு.

அதில் ஒரு புகைப்படத்தின் இருபுற தோற்றத்தை தேர்வு செய்வதை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என ஒன்பது வகையாக பிரித்து அறியப்பட்டது.

கச்சிதம் மற்றும் யோசித்து செயல்படுபவர்,
நேர்மை மற்றும் சுதந்திரமாக செயல்படுபவர்,
எதையும் சவாலாக எடுத்துக் கொள்ளும் நபர்,
அக்கறை மற்றும் உதவும் மனப்பான்மை கொண்டவர்,
உத்வேகம் மற்றும் வெளிப்படையாக பழகுபவர்,
 தனிமை மற்றும் வெளிப்படை அற்றவர்,
ஆராய்ச்சி மற்றும் உருவாக்குபவர்,
நேர்மை மற்றும் வெற்றி, அமைதி மற்றும் அடக்கம்.
என 9 பிரிவுகளாக மக்களின் குணாதிசயங்கள் பிரித்திருந்தனர்.

போட்டோ #1
இந்த படத்தை 20% பேர் தேர்வு செய்திருந்தனர். இவர்கள் மிகவும் ஸ்பெஷலானவர்கள். இந்த படத்தில் நிலா வலது பக்கம் பார்த்திருக்கும், கடல் அமைதியாக சீற்றமின்றி இருக்கும். இது இந்த படத்தை தேர்வு செய்த நபரின் ஆசைகள் மற்றும் உருவாக்கம் எல்லை அற்றது என்பதை காண்பிக்கிறது.

தனித்தன்மை!
தாங்கள் அதிகமாக கனவு காண்கிறோம் என்பதையே இவர்கள் குறைவாக தான் அறிந்திருப்பர். இவர்களது கனவுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் மகத்தானதாக, உயர்வாக இருக்கும். தினம், தினம் தங்கள் கனவுக்காக எதையாவது செய்துக் கொண்டே இருப்பார்கள். தங்கள் கனவை எட்டிப்பிடிக்கும் வரை ஓயமாட்டார்கள். ஏனெனில், அதில் தான் அவர்களது மகிழ்ச்சி அடங்கியிருக்கும்.

சீக்ரெட்!
அதிகம் கனவு கண்டாலும் இவர்கள் ரியாலிட்டியில் எதையும் தவறவிட்டுவிட மாட்டார்கள். தங்கள் எதிர்காலம் பற்றி நிறைய அறிந்து வைத்திருப்பார்கள். காதல், நட்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள். நீங்க கால உறவில் நிலைத்து நிற்பார்கள். தங்கள் தொழிலில் வெற்றிகரகமாக இவர்கள் திகழ்வார்கள்.

போட்டோ #2
பத்தில் மூன்று பேர் இந்த படத்தை தேர்வு செய்திருந்தனர். இதில் நிலா வலது பக்கம் நோக்கியும், கடல் சீற்றமாகவும் காணப்படும். இவர்களது குணாதிசயங்கள் மிகவும் வலிமையாக இருக்கும். உணர்வு ரீதியாக மிகவும் பிணைக்கப்பட்டு காணப்படுவார்கள். முக்கியமாக ஒரு செயலில் முடிவெடுக்கும் போது. தங்கள் இதயம் என்ன சொல்கிறதோ அதை தான் செய்வார்கள்.

தனித்தன்மை!
நேர்மை, தாராள, கனிவான மனது கொண்டிருப்பார்கள். தங்களை போன்றே இருக்கும் மக்களுடன் அதிகம் பழகுவார்கள். அவர்களை மகிழ்வாக வைத்துக் கொள்வார்கள். தங்களுக்கு எது நல்லது வாய்க்குமோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள்.


சீக்ரெட்!
ஒரே நட்பு வட்டாரத்துடன் நீண்ட நாள் உறவில் நிலைத்திருப்பார்கள். ஒரே உணவு விடுத்திக்கு தான் உணவருந்த செல்வார்கள், இவர்களது வாழ்க்கை ஒரே சுழற்சி பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும். பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது. மற்றவர்கள் சந்தோசப்படுத்தி மகிழ்வார்கள்.

 போட்டோ #3
15% பேர் இந்த படத்தை தேர்வு செய்திருந்தனர். இதில் நிலா இடது பக்கம் நோக்கி இருக்கும். கடல் குறைந்த அலைகளுடன் அமைதியாக இருக்கும். இவர்கள் எதையும் அறிவு சார்ந்து முடிவு செய்ய வேண்டும். சராசரிக்கும் மேலான புத்திக்கூர்மை கொண்டிருப்பார்கள். இவர்களது கூர்மையான அறிவு எதையும் தவரவிட்டுவிடாது. இவர்களது உள்ளுணர்வு இவர்களை பல சிக்கல்களில் இருந்து வெளிக் கொண்டு வந்திருக்கும்.

தனித்தன்மை!
மக்களுடன் சகஜமாக பழகுவார்கள். இவர்களை சுற்றி எப்போதும் பெரிய நட்பு வட்டாரம் இருக்கும். வேலை என்று வரும் போது இவரை மிஞ்ச ஆள் இருக்காது. யாரும் துணைக்கு இல்லை என்றாலும் தானாகே ஒரே ஆளாக நின்று வேலையை முடிப்பார்.

சீக்ரெட்!
சில சமயங்களில் இவர்களுக்கு மற்றவர் மீது பொறாமை ஏற்படும். முக்கியமாக தன்னை தாண்டி ஒருவர் வெற்றி பெறும் போது. ஏன், அவர்கள் மீது கோபம் கூட வரலாம். பிறகு அதை புரிந்துக் கொண்டு. வேலையில் தான் எப்படி முதல் இடம் பிடிப்பது என்று பயணிக்க துவங்குவார்கள். அதிக திறமை இருக்கும், நிறைய பேசுவார்கள், விவாதம் செய்வார்கள். தன் பேச்சால் மக்களை ஈர்க்கும் குணம் கொண்டிருப்பார்கள்.

போட்டோ #4
35% பேர் இந்த படத்தை தேர்வு செய்திருந்தனர். இவர்கள் ஆச்சரியப்படும் வகையில் இருப்பார்கள். அமைதி, பொறுமை மிகுந்த காணப்படும் இவர்கள் மத்தியில். எதையும் பொறுமையாக செய்வார்கள். முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது, பதில் கூறும் போது தன்னை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்வார்கள்.

தனித்தன்மை!
இவர்களிடம் ஆர்வம் அதிகமாக இருக்கும். தாங்கள் செயற்படும் வேலைகளில் இருக்கும் அனைத்து விஷயங்கள் பற்றியும் இவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். நண்பர்களுடன் வெளியே செல்ல அதிகம் விரும்புவார்கள். கலகலப்பாக இருப்பார்கள். அதே போல துணையுடன் நேரம் செலவழிப்பதையும் தவறவிடமாட்டர்கள். சமநிலை பின்பற்றுவார்கள்.

சீக்ரெட்!
சாகச செயல்கள், மற்றவர்கள் செய்ய அச்சப்படும் வேலைகளில் துணிச்சலாக செயல்படுவார்கள். தங்களுக்கு பிடித்த நபர்களுடன் ரிலாக்ஸ் செய்ய விரும்புவர்கள்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post