உங்க காதலியின் ராசியை வைத்து.. அவர் உறவில் என்ன ஆசைப்படுவார் என அறிவது எப்படி?

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் இருப்பது போல, ஒவ்வொரு ராசி கொண்டுள்ள பெண்ணுக்கும் காதலில் ஒவ்வொரு ஆசை, தான் விரும்பும், தான் காதலிக்க போகும் நபரிடம் இந்த குணாதிசயங்கள், பண்புகள் எல்லாம் இருக்க வேண்டும் என எண்ணுவார்களாம்.

அப்படி ஒரு ஆணை பார்த்துவிட்டால் அவர்களுடன் காதலில் விழ, நீந்த, பறக்க இவர்கள் அஞ்சுவதே கிடையாது.

ஒருவேளை நீங்கள் காதலிக்கும் பெண் அல்லது காதலித்து கொண்டிருக்கும் பெண் எந்த ராசியாக இருந்தால், அவர் உங்களிடம் என்ன அதிகம் எதிர்பார்ப்பார் என நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டுமா?

இதோ! அப்ப இந்த தொகுப்பு உங்களுக்கானது தான்...

மேஷம்!
ஒரு சிறந்த நண்பராக, நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு சிறந்த காதலராக இருத்தல் வேண்டும். இது தான் மேஷ ராசி பெண்களின் ஆசை. தானாக அவர் மீது மிகுதியான காதலில் விழ வேண்டும் என்பது அவரது ஆசை. முடிவிலி பயணமாக தங்கள் உறவு இருக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்படுவார்கள். சில சமயங்களில் மேஷ ராசி பெண்கள் குழந்தைத்தனமாக நடந்துக் கொள்வார்கள். சில்லித்தனமான செயல்களில் ஈடுபடுவர். ஆனால், அவர்கள் செய்வது எல்லாமே தங்கள் துணை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!

ரிஷபம்!
எல்லாரையும் போல, சினிமாவில் காண்பிப்பது போல, சமூக ஊடகங்களில் பகிரப்படும் அந்த காதல் மிதிக்கும் பதிவுகள் போல உங்களால் காதலிக்க முடியுமா? அல்லது உங்கள் காதலி ரிஷப ராசி என்றால்.. நீங்கள் இப்படி தான் இருந்தாக வேண்டும். அவர்கள் விருப்பம் இது தான். தங்கள் உறவை பற்றி இந்த உலகம் அறிய வேண்டும் என்பதே ரிஷப ராசி பெண்களும் பேரார்வம் மற்றும் ஆசை.

மிதுனம்!
இயல்பாகவே பேரார்வம் கொண்டிருப்பார்கள் மிதன ராசி பெண்கள். நிலையற்று, சாத்தியமற்று சில தருணங்களில் காணப்படும் மிதுன ராசி பெண்கள் சில சமயங்களில் காதல் அலுத்துப்போய்விட்டால், உறவில் இருந்து வெளிவரவும் தயங்க மாட்டார்கள். தனது முழு ஈர்ப்பையும் பெற்ற ஒருவரை தான் இவர்கள் விரும்புவார்கள். எனவே, மிதுன ராசி பெண்கள் மீது காதல் வயப்படுவது என்பது, முழு மனதால் இணைந்தால் மட்டுமே அது சாத்தியம்.

கடகம்!
 கடக ராசி பெண்கள் தங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் ஒரே பண்பு, நம்பிக்கை! அதே போல அவர் எல்லா இரகசியங்களும் உங்களிடம் கூறுவார் என எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் சில சமயங்களில் மனம் திறந்து பேச அவர்கள் தயக்கம் காட்டுவர். அந்த தயக்கத்தை உடைக்க நீங்கள் அவரது முழு காதலையும் பெற வேண்டும்.

சிம்மம்!
 நம்பிக்கையும், நேர்மையும் தான் சிம்ம ராசி பெண்கள் எதிர்ப்பார்க்கும் பண்புகள். இந்த இரண்டு பண்புகள் உங்களிடம் இருந்தால் மட்டுமே போதும், சிம்ம ராசி பெண்கள் உங்களை காதலிக்க துவங்கிவிடுவார்கள். உறவில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. அதே போல அர்ப்பணிப்புடன் உறவில் இருக்க வேண்டும். அவரது நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும். சிம்ம ராசி பெண்கள் தங்கள் காதல் துணை தான் உலகம் என எண்ணி வாழ்பவர்கள்.

கன்னி!
மிஸ்டர் பர்பெக்ட்டாக இருக்கும் நபர்களை தான் தங்கள் துணையாக தேடுவர் கன்னி ராசி பெண்கள். தங்களுக்கு சவால்விடும் வகையிலான நபர்களை தான் அதிகம் விரும்புவார்கள். அவர்களை காட்டிலும் நீங்கள் அதிகமாக நல்லவராக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் அவரளவுக்காவது. அதே போல தனது கனவுகள் மற்றும் வெற்றிக்கு பக்கபலமாக, உறுதுணையாக இருக்க வேண்டும் என எண்ணுவர்.

துலாம்!
வியப்பூட்ட வேண்டும், பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் ஈர்ப்பு இருக்க வேண்டும் என்பதே துலா ராசி பெண்களுடன் விருப்பம் மற்றும் ஆசை. இவர்களை சுற்றி என்றுமே பெரிய ஆசைகள் இருக்கும். ஒயின், ரோஜாக்கள், கேண்டில் லைட் டின்னர் என ஒரு அழகான காதல் வாழ்க்கை வாழ விரும்புவர். அதே போல, துலா இராசி பெண்களிடம் காதலை வெளிப்படுத்த தயக்கம் கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்!
அவர்களது ஆசைகள் மற்றும் வாழ்வில் நீங்கள் வேறு யாரையும் பொருத்திப்பார்க்க முடியாத ஒரு நபராக இருக்க வேண்டும் என விரும்புவர். இணைதல் மற்றும் கூடலில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அதே சமயத்தில் தங்கள் துணை தன் மீது மட்டுமே அனைத்து அன்பையும் காட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். தன்னை காட்டிலும் அதிக நேரம் வேறு யாருடனும் செலவிட கூடாது என எண்ணுவர்.

தனுசு!
சுதந்திரமாக இருக்க வேண்டும். உறவு என்பது அவர்களது பாதையில், பயணத்தில் ஒரு தடையாக இருக்க கூடாது என தனுசு ராசி பெண்கள் விரும்புவார்கள். தன்னை போலவே இருக்கும் நபரை தான் தேடுவர். கேலியும், துணிகரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் இவர்களுடன் காதல் பயணத்தை துவக்கலாம்.

மகரம்!
மகர ராசி பெண்கள் தங்கள் வாழ்க்கையை மிகவும் தீவிரமாக காணும் பண்பு உடையவர்கள். எந்த வேலையாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடு, முழு ஆர்வம் காட்டுவார்கள். நேர்மையும் காதலும் அதிகம் வாழ்க்கையில் பெற விரும்புவார்கள். குறுகிய கால உறவிற்கு இவரிடம் நேரம் இருக்காது. நிலைத்து இருக்க வேண்டும்.

கும்பம்!
புத்திசாலி, கிரியேட்டிவாக இருக்கும் இவர்கள் அதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பார்கள். தங்கள் திறமையை பாராட்டாத நபர்களை இவர்கள் விரும்ப மாட்டார்கள். நீங்களும் கிரியேட்டிவ் நபராக இருந்தால் இவருடன் காதல் பயணம் இனிதாக இருக்கும்.

மீனம்!
காதலை அதிகம் காதலிக்கும் பெண்கள் மீன ராசி பெண்கள். தன்னை ஊக்குவிக்கும், நேர்மறை எண்ணங்களை தன்னுள் விதைக்கும் நபரை தான் இவர்கள் விரும்புவார்கள். அதே போல கடினமான சூழல்களில் சிறந்த உறுதுணையாக நிற்பார்கள். மிக உணர்ச்சிவசப்படும் நபர்கள்.
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post