17.07.2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்துப் போகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளை களிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். உறவினர் பகை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மிதுனம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிறப்பான நாள்.


கடகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர் கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நேர்மறை எண்ணம் தோன்றும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பர். உற்சாகமான நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன் படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக் கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

துலாம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர் கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.

தனுசு: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபா ரத்தைவிரிவுப்படுத்துவீர்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். புதுமை படைக்கும் நாள்.

மகரம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப் பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபா ரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக் கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். புது தெம்பு பிறக்கும் நாள்.




Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post