12.08.2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத் தில் மதிப்புக் கூடும். சாதிக்கும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


கன்னி: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அமோகமான நாள்.

விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர் கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் விமர் சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post