இந்த ரேகையை வைத்து எத்தனை காதல் உறவுகள் என கண்டுபிடிக்கலாம்!!!!

கைகளில் ரேகைகள் பார்க்கும் போது, நாம் எந்த கைப்பழக்கம் அதிகமாக கொண்டுள்ளமோ அந்த கைகளில் உள்ள ரேகையை வைத்து பார்க்க வேண்டும்.

அதன் அடிப்படையில் கைகளில் உள்ள திருமண ரேகைகள் பற்றிய சில கேள்விகளுக்கான பதில்களை விரிவாக பார்க்கலாம்.

கையில் எத்தனை ரேகைகள் உள்ளன?

திருமண ரேகை முதலில் திருமண சம்பிரதாயத்தை குறிக்கவில்லை. அது நம் வாழ்க்கையில் ஏற்படும் காதல் உறவுகளை குறிப்பது. எனவே இந்த ரேகையை காதல் ரேகை என்று கூறுவதே பொறுத்தமானது.

நம் வாழ்க்கையின் காதல் உறவுகள் எத்தனை என்பதை இந்த காதல் ரேகை காட்டி கொடுத்துவிடும்.


உங்கள் கைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட ரேகைகள் இருந்தால் அது ஒன்றிற்கும் மேற்பட்ட காதல் உறவுகளை குறிக்கும். இதை வைத்தே உங்கள் காதல் வெற்றி பெறுமா இல்லையா என்பதை கூட தெரிந்து கொள்ளலாம்.

திருமண ரேகையில் நீளம் எவ்வளவு?

திருமண ரேகையின் நீளத்தை வைத்து உங்கள் உறவு எவ்வளவு காலம் நிலைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த ரேகையின் நீளம் குறைவாக இருப்பின், அந்த உறவு அதிக காலம் நிலைத்திருக்காது.

திருமண ரேகையின் அகலம் எவ்வளவு?

திருமண ரேகை அல்லது காதல் ரேகை உங்கள் கையில் தடித்திருந்தால் அது உங்கள் காதல் உறவின் மேல் நீங்கள் கொண்ட அன்பின் ஆழத்தை குறிக்கும்.

அதுவே மெலிதாக இருந்தால், அது உங்கள் காதல் உறவின் ஆழமின்மையை குறிக்கும்.

திருமண ரேகை மற்றும் இதய ரேகை

திருண ரேகை எந்த இடத்தில் இதய ரேகையை நோக்கி திரும்புகிறது என்பது முக்கியம். ஏனெனில் இதய ரேகை வந்து சந்திக்கும் இடத்தை வைத்து ஒருவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பதை கணிக்கலாம்.

திருமண ரேகையின் குறுக்கே ஓடும் கோடுகள் ஏன்?

திருமண ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடினால் அது நிச்சயம் நல்லது அல்ல. ஏனெனில் அது உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சனைகளை குறிக்கும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post