09.10.2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் வந்துப் போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வரக்கூடும்

மிதுனம்: வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.

சிம்மம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.

கன்னி: குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.


துலாம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் கோபத்தால் இழப்புகள் ஏற்படும். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.

விருச்சிகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.

தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.

கும்பம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்

மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post