இந்த வாரம் யாருக்கெல்லாம் அதிஷ்டம்.. (9-10-17 முதல் 15-10-17 வரை)

மேஷம்
வாழ்க்கை தரம் உயரும். வரவவைிட செலவுகள் கூடும். செலவுகளை குறைப்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் கலந்திருக்கும். பேச்சில் கேலியும், கிண்டலும் அதிகமாக வெளிப்படலாம். உடன்பிறந்தோரால் தர்ம சங்கடமான சூழலுக்கு ஆளாக நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்களை நம்பி செயலில் இறங்கக் கூடாது. வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறிது சிரமம் காண நேரிடும். பிள்ளைகளின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். மருத்துவ செலவுகள் தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டென்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். கலைத்துறையினர் ஒரு சில தடைகளை சந்திப்பர். தொழிலில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கலாம் என்பதால் கவனம் தேவை. சரிசமபலன்களை காணும் வாரம் இது.வழிபாடு ஸ்கந்த குரு கவசம் படித்து வரவும்.

 ரிஷபம்
இழுபறியில் இருந்த காரியங்கள் நடைபெறும். கேட்காமலேயே உதவி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மன விரக்தி காணாமல் போகும். சுறுசுறுப்பு கூடும். வரவில் தடைகள் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் கலந்திருக்கும். அவசரப்பட்டு பேசும் பேச்சு அடுத்தவர் மனதை புண்படுத்தக்கூடும். முக்கியமான பணிகளில் உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்படுவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். உறவினர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற கடுமையான உழைப்பு அவசியம். வாகனங்கள் ஆதாயம் தரும். குடும்பப் பிரச்னைகளில் பிள்ளைகளை சார்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கும். ஜுரம், காய்ச்சலால் உடல்நிலையில் சிரமம் காண நேரலாம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கலைத்துறையினரின் எண்ணங்கள் வெற்றி பெறும். தொழிலில் வெற்றி கிடைக்கும். சராசரி பலன்களை தரும் வாரமிது.வழிபாடு:கண்ணபிரானை வணங்கி வரவும்.

மிதுனம்
மனதில் தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்க இயலாது தடுமாறுவீர்கள். எதிர்கால யோசனைகளால் பணிகளின் வேகம் குறையும். மன குழப்பங்களை வெளிக்காட்டாது செயல்படுவீர்கள். பேச்சால் கவுரவம் அதிகரிக்கும். குடும்பத்தில் சலசலப்பு உருவாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டு. உடன்பிறந்தோரின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் செயல்களுக்கு துணை நிற்கும். வாகனங்கள், பிரயாணங்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களின் கல்வி நிலை உயர்வு பெறும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பீர்கள். சிந்தனைகள், குழப்பங்களால் உடல்நிலை பாதிப்படையும். தொழிலில் அதிக அலைச்சல் இருந்தாலும் உழைப்பிற்கேற்ற நற்பெயர் கிடைக்கும். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் தனலாபம் கிடைக்கும். குழப்பங்களை களைந்து வெற்றி காண வேண்டிய வாரம் இது.வழிபாடு: ஸ்ரீராமரை வணங்கி வரவும்.

கடகம்
வாழ்க்கை தரம் உயரும். எதிலும் கூடுதல் தைரியத்துடன் பணியாற்றுவீர்கள். சில விஷயங்களில் நேரடியாக செயல்படாமல் நம்பிக்கைக்குரியவர்களை இயக்கி வெற்றி காண்பீர்கள். திட்டமிடும் பணிகளில் வெற்றி காண்பீர்கள். சேமிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், ஃபர்னிச்சர்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சலசலப்பு உருவாகும். சுபகாரியங்களுக்காக உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். மாணவர்கள் கல்வியில் முன்னேற கூட்டு பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. பிரயாணத்தின்போது கூடுதல் செலவுகள் இருக்கும். உறவினர்களால் தர்ம சங்கடமான சூழலுக்கு ஆளாக நேரலாம். பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமிதம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு துணை நிற்பீர்கள். தொழிலில் வெற்றி காணும் நேரம் இது. கலைத்துறையினர் எதிர்பார்க்கும் தனலாபம் கிடைக்கும். நன்மை காணும் நேரமிது.வழிபாடு:ஆஞ்சநேயரை வணங்கவும்.


சிம்மம்
தன்னம்பிக்கை கூடும். திட்டமிட்டால் வெற்றி உறுதியாகும். புதிய தடைகள் முளைத்தாலும் அவற்றைத் தாண்டும் வழி அறிந்திருப்பீர்கள். பேச்சால் பிரச்னைகளை சந்திக்க நேரும். பிரச்னைக்குரிய நேரத்தில் எதிராளியை குழப்பி வெற்றி காண்பீர்கள். எதிலும் நினைப்பதை எழுத்து மூலம் வெளிப்படுத்தினால் உடனடி பலன்களை காண்பீர்கள். குடும்பத்தினரோடு திடீர் பயண வாய்ப்பு உண்டு. செலவிற்கேற்ற வரவும் இருக்கும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். மாணவர்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டால் கல்வியில் முன்னேற்றம் காண முடியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். வாழ்க்கைத்துணையோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தர்ம காரியங்களில் முன்நின்று செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு அலைச்சல் கூடும். உத்யோகஸ்தர்களுக்கு தற்காலிக இடமாற்றம் இருக்கும். நன்மை காணும் நேரம் இது.

கன்னி
சாதகமான பலன்களை காண உள்ளீர்கள். நினைத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வரவு சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கருத்துவேறுபாடு தோன்றக்கூடும். சுவையான உணவுகளை ருசிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தோர் இல்ல விசேஷங்களில் முன்நின்று செயல்படுவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பயனுள்ள வகையில் அமையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற கூடுதல் எழுத்து பயிற்சி அவசியம். குடும்பத்தில் சலசலப்பு கூடும். வாகனங்கள், பிரயாணங்களால் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் மன வருத்தம் தரும். வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு பக்கத்துணையாக இருந்து செயல்படுவீர்கள். கலைத்துறையினர் அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் வீண் விரயத்திற்கு ஆளாவர். பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினை பற்றிய பேச்சுகள் எழலாம். கூட்டுத்தொழில் சிறப்பான லாபம் பெற்று தரும். நினைத்தது நடக்கும் வாரம் இது.வழிபாடு: மகாலட்சுமியை வணங்கி வாருங்கள்.

துலாம்
எந்த ஒரு விஷயத்தையும் போராடி ஜெயிக்க வேண்டியிருக்கும். எடுத்த செயல்களில் இடைஞ்சல்கள் ஏற்படும். இருப்பினும் சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகம் பேசாது அமைதி காத்தல் நலம். குடும்பத்தில் சிறு பிரச்னைகள் இருக்கும். பொருளாதார முன்னேற்றத்தில் தடை உண்டாகும். உடன்பிறந்தோரின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். மாணவர்கள் கல்வியில் தேக்க நிலை இருக்கும். உறவினர்களால் குடும்பத்தில் அநாவசிய கலகங்கள் வரும். பிள்ளைகளால் மனதிற்கு இனிமை தரும் சம்பவங்கள் நடைபெறும். கடன்பிரச்னைகள் தலைதூக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் பயன் தரும் வகையில் அமையும். கலைத்துறையினர் புதிய படைப்பிற்காகத் திட்டமிட நேரிடும். தொழில்முறையில் போட்டி, பொறாமைக்காரர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு காரியத்திலும் தடையைத் தாண்டி வெற்றி காண வேண்டிய வாரம் இது.வழிபாடு:சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

 விருச்சிகம்
எதிலும் சாதகமான நற்பலன்களை காண உள்ளீர்கள். ஆகவே முக்கியமான பணிகளை உடனடியாக செய்து முடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஒரே சீராக இருந்து வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவி வரும். உடன்பிறந்தோருடனான சந்திப்பு நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும். தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் துணை நிற்கும். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு.மாணவர்களின் கல்வித் தரம் உயரும். பிள்ளைகளின் வேகமான செயல்களைச் சொல்லி பெருமிதம் கொள்வீர்கள். சிந்தனைகளில் உதிக்கும் கருத்துகள் அங்கீகாரம் பெறும். கடன்பிரச்னைகள் கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற விவாதத்தால் கருத்து வேறுபாடு தோன்றும். கலைத்துறையினர் எதிர்பார்த்த ஆதாயம் காண்பர். தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். சரிசம பலன்களைக் காணும் வாரம் இது.
வழிபாடு:குருபகவானை வழிபடவும்.

தனுசு
நினைத்த காரியங்கள் நடந்தேறும். மனதில் விவேகமான சிந்தனைகள் ஊற்றெடுக்கும். எந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது என்ற வழிமுறைகளைத் தெரிந்து கொள்வீர்கள். பொருளாதார நிலையை சமாளிக்கும் திறன் இருக்கும். உடன்பிறந்தோரால் சங்கடத்தினை சந்திக்க நேரும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது நிதானம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். உடல்நிலையை கருத்தில் கொண்டு அதிகம் அலையாது நேரம் கிடைக்கும்போது ஓய்வெடுப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் வீண் விவாதம் காரணமாக அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கடன்பிரச்னைகள் கட்டுக்குள் இருந்து வரும். பண விவகாரங்களில் அடுத்தவர்களை நம்பி ஜாமீன் பொறுப்பேற்பதை தவிர்ப்பது நல்லது. தொழில்முறையில் அதிக அலைச்சலை சந்திப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்பு வந்து சேரும். நினைத்ததை நடத்தி முடிக்கும் நேரம் என்பதால் நற்பலனைக் காணும் வாரமே.வழிபாடு:விநாயகரைவழிபடவும்.

மகரம்நி
நினைத்த காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். ஆயினும் மனதில் விரக்தி உருவாகும். பொருளாதார நிலையில் சிரமம் ஏதும் உண்டாகாது. குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோருடனான சந்திப்பு நிம்மதி தரும். ருசியான உணவுகளை சுவைப்பதில் ஆர்வம் கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் நேரத்தை மிச்சப்படுத்தும். மாணவர்கள் செய்முறை வகுப்புகளில் கூடுதல் ஆர்வம் கொள்வர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை வகுத்து வருவீர்கள். சிந்தனையில் இருந்த குழப்பங்களை ஓரம் கட்டி வைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் செயல்படுங்கள். வாழ்க்கைத்துணையின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பீர்கள். முன்னோர்களின் நினைவுகள் அவ்வப்போது மனதில் அலைபாய்வதைத் தடுக்க இயலாது. உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். கலைத்துறையினர் சிறப்பான நற்பெயர் காணும் நேரம் இது. நற்பலன்களை அனுபவிக்கும் வாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.வழிபாடு: சனியன்று அன்னதானம் செய்யுங்கள்.

கும்பம்
முன்னேற்றப் பாதையில் பயணிக்க துவங்குவீர்கள். செயல்களில் விவேகம் உண்டாகும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாது ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுங்கள். அனுபவ பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டால் வெற்றி உறுதி. எதிர்பார்த்த தனலாபம் காண கூடுதல் உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். வண்டி, வாகனங்களை மாற்றும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக அமையும். பிரயாணத்தின்போது மனமகிழ்ச்சி காண்பீர்கள். பிள்ளைகளின் ஆலோசனைகள் தொழில்முறையில் வெற்றி தரும். வாழ்க்கைத்துணையின் நெடுநாளைய விருப்பத்தினை நிறைவேற்றும் வாய்ப்பு உருவாகும். தொழில்முறையில் சிறப்பான நற்பலன்களைக் காண உள்ளீர்கள். கலைத்துறையினர் காரியத்தடையை சந்திப்பர். சரிசம பலன் தரும் வாரம் இது.வழிபாடு:கருமாரியம்மனை வழிபடுங்கள்.

மீனம்
செலவுகள் கூடும். சிந்தனைகளில் மாற்றம் இருக்கும். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்கள் வகுப்பீர்கள். நிதானமாகப் பேசுவது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ருசியான உணவுகளை சூடாக உண்பதில் நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தகவல் தொடர்பு சாதனங்களில் இருந்த இடையூறுகள் நீங்கும். உயர்கல்வி மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகளின் வேகமான செயல்பாடுகள் ஒருபுறம் அச்சம் தந்தாலும் மறுபுறம் பெருமிதம் கொள்ள செய்யும். மருத்துவ செலவுகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் உடல்நிலையில் கவனம் அவசியம். தம்பதியருக்குள் மனஸ்தாபம் தோன்றும். அயல்நாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு நல்ல தகவல் வந்து சேரும். எதிர்பார்ப்புகள் இல்லாமல் உண்மையாக உழைத்தால் சிறப்பான தனலாபம் காண்பது உறுதி. கலைத்துறையினர் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். சரிசம பலன்களைக் காணும் வாரம் இது.வழிபாடு: வக்ரகாளியம்மனை வணங்கி வரவும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post