உங்க ராசிக்கு இந்த நாளில் தங்கம் வாங்கினால் தான் யோகம் அடிக்குமாம்!

இந்த தினத்தன்று இந்த ராசிக்காரர்கள் மட்டும் தங்கம் வாங்கினால் அவர்களுக்கு யோகம் அடிக்கும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்களுக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்து கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கினால், அது ஆண்டு முழுவதும் நிலைத்து நிற்கும் என்பது இயல்பு.

அதே போன்று அக்ஷய திருதியை அன்று எந்தப் பொருளை வாங்கினாலும், அது ஆண்டு முழுவதும் பல்கிப் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.

நாம் விலை உயர்ந்ததாக கருதும் பொன்னான விஷயம் தங்கம், வைரம் ஆகியவை தான். செல்வம் கொழிக்கச் செய்யும் தங்கம் மற்றும் வைரத்தால் ஆன நகைகளை அக்ஷய திருதியை அன்று வாங்கிச் சேர்க்க வேண்டும் என பெண்கள் விரும்புவது இயல்பான ஒன்று.


இப்படி பார்த்து பார்த்து நகை வாங்குபவர்கள் இதனையும் கருத்தில் கொண்டு நகை வாங்கினால், அவர்களுக்கு யோகம் அடிக்கும் என்ற ஐதீகமும் இருக்கிறதாம்.

கன்னி, விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி, வியாழன் ஆகிய இரு நாட்கள் மட்டும் தான் நகை வாங்குவதற்கு நல்ல நாட்களாக கருதப்படுகிறது. மற்ற நாட்களில் அவர்கள் நகை வாங்கினால், அந்த நகை அவர்களிடத்தில் இருக்காதாம்.

மேஷம் – ஞாயிறு, வெள்ளி

ரிஷபம் – புதன், வெள்ளி

மிதுனம் – திங்கள், வியாழன்

கடகம் – ஞாயிறு, திங்கள், புதன்

சிம்மம் – புதன், வெள்ளி

கன்னி – சனி

துலாம் – திங்கள், வெள்ளி

விருச்சிகம் – சனி

தனுசு – வியாழன்

மகரம் – புதன், வெள்ளி

கும்பம் – புதன், வெள்ளி, ஞாயிறு

மீனம் – வியாழன், திங்கள்

ஆகிய நாட்களில் அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் ஆபரணங்கள் வாங்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post