09.01.2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்:
உங்கள் பேச்சை, சிலர் தவறாக புரிந்து கொள்வர். நிதானத்தைக் கடைபிடிக்கவும். தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிட்டு மறையும். மிதமான லாபம் கிடைக்கும். வாகனத்தில், மிதவேகம் பின்பற்றவும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர்.

ரிஷபம்:
அவமதித்தவர் அன்பு பாராட்டும் சூழல் உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.

மிதுனம்:
அடுத்தவர் விஷயத்தில், தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறு குறுக்கிடலாம். சுமாரான ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு, மனநிம்மதிக்கு வழிவகுக்கும். விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள்.

கடகம்:
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும்.

சிம்மம்:
வாழ்வில் ஆடம்பர வசதி பெருகும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

கன்னி:
நண்பர்களின் ஆலோசனையால் வளர்ச்சி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

 
துலாம்:
குடும்ப பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் சீர் பெற விடாமுயற்சி அவசியம். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் அதிக விலையுள்ள பொருட்களை கவனமாக கையாள்வது நல்லது.

விருச்சிகம்:
அன்றாடப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். கடினமான பணியும் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

தனுசு:
மனதில் நம்பிக்கை ஒளி பிரகாசிக்கும். முக்கிய செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் செழித்து புதிய சாதனை படைப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். வீடு வாகனத்தில் புதிய மாற்றம் செய்வீர்கள்.

மகரம்:
நண்பர்களிடம் விவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள், வீட்டுச் செலவைச் சமாளிக்க திணறுவர். உடல் நலனில் அக்கறை அவசியம்.

கும்பம்:
உங்கள் பேச்சு, பிறரைச் சங்கடப்படுத்தலாம். யாருக்கும் அளவுக்கு மீறி வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப லாபம் கிடைக்கும். பணியாளர்கள், பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர்.

மீனம்:
குடும்பத்தில் இருந்த குழப்ப சூழ்நிலை சரியாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். வாகனப் பயணத்தின் மூலம் இனிய அனுபவம் காண்பீர்கள். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post