பாகுபலி-2' ரூ.1500 கோடியை தாண்டி புதிய மைல்கல்லை தொட்டது!!


ஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், சுப்பா ராஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் `பாகுபலி-2'. பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக வெளியான இப்படம் வசூலில் நாளுக்கு நாள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. 

உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘`பாகுபலி-2'’, திரையிடப்பட்ட 3 வாரங்களில் ரூ.1500 கோடியை வசூல் செய்து உலக அளவில் சரித்திர சாதனை படைத்து உள்ளது. இந்திய வரலாற்றில் ரூ.1000 கோடியை தாண்டிய முதல் படம் என்ற வரலாற்று சாதனையை படைத்திருந்த `பாகுபலி-2', அடுத்ததாக ரூ.1502 கோடியை வசூல் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 


பாகுபலி படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதம் ரூ. 650 கோடி வசூல் செய்திருந்த நிலையில், `பாகுபலி-2' அதன் இரண்டு மடங்கு வசூலை பெற்று இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
`பாகுபலி-2' க்கு அடுத்தபடியாக அமீர்கானின் `தங்கல்' படம் சீனாவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. சீனாவில் ரிலீசாகிய 14 நாட்களில் `தங்கல்' ரூ.500 கோடியை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.1275 கோடியை வசூல் செய்துள்ள `தங்கல்' அதிக வசூல் செய்த இந்திய படங்களில் இரண்டாவது இடத்தையும், ரூ. 1502 கோடியுடன் `பாகுபலி-2' முதல் இடத்தையும் பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றன. 

தைவானில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற பெருமையை `தங்கல்' பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post