பிரபல வில்லன் நடிகரையும் மனைவியையும் எச்சரித்த நீதிமன்றம்!!

விசாரணைக்கு ஆஜராகாத வில்லன் நடிகர் சுதீப் மற்றும் அவரது மனைவியை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

விஜய் நடித்த ‘புலி’ படத்தின் வில்லனாக நடித்தவர் நடிகர் சுதீப். இந்தப் படத்தில் சுதீப்பின் வில்லன் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

இந்த நிலையில் சுதீப்பும் அவருடைய மனைவியும் திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து காரணமாக பெங்களூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

ஒருபுறம் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் இன்னொரு புறம் சுதீபும் அவருடைய மனைவியும் சமாதானம் ஆகி மீண்டும் வாழ தொடங்கிவிட்டார்களம். 


இந்த நிலையில் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் கடுப்பான பெங்களூர் நீதிமன்ற நீதிபதி சுதீப்பையும் அவருடைய மனைவியையும் எச்சரித்ததோடு, அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

இதனிடையே வழக்கை வாபஸ் வாங்க சுதீப் தம்பதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post