நடிகை ஓவியாவுக்கு இப்படி ஒரு நிலமையா..!!

வளர்ந்து வந்த நடிகை ஓவியாவின் நிலைமை இப்படியாகி விட்டது என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

‘களவாணி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஓவியா. இந்தப் படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்தார். இவரது பூர்வீகம் கேரளம்.

அதன்பிறகு சுந்தர்.சியின் ‘கலகலப்பு’ படத்தில் கவர்ச்சி நாயகியாக உருவெடுத்தவர், அஞ்சலியுடன் இணைந்து குத்துப்பாட்டு நடிகைகளுக்கு இணையாக அதிரடி ஆட்டமும் ஆடினார்.


என்றாலும், பின்னர் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வந்ததால் அடுத்தபடியாக படவாய்ப்புகள் இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக மார்க்கெட் இல்லாமல் இருந்தார்.ஓவியா.

இந்த நிலையில், தற்போது அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கும் ஓவியா, விஷ்ணு தயாரித்து, நடித்து வரும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்க, ஓவியா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடுகிறார். இந்தப் படத்தை இயக்குனர் எழிலின் உதவியாளர் செல்லா இயக்குகிறார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post