பிரபல நடிகையை துடிக்க வைத்து வீடியோ எடுத்த பல்சர் சுனில்.. செல்போனில் பார்த்து ரசித்த திலீப்!!!

மலையாள நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ, நடிகர் திலீப்பிடம் உள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கும், ஏற்கனவே இந்த வழக்கில் கைதான பல்சர் சுனிலுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து கொச்சி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த விசாரணையின்போதுதான் திலீப்பின் மற்றொரு முகம் வெளியே வந்துள்ளது.

அவர் தன்னை எதிர்ப்போரை எப்படியெல்லாம் பழிவாங்குவார் என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த விசாரணை.


மற்றொரு முகம்
போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. திலீப்பின் மற்றொரு முகம் ரசிகர்களின் முன்பு அம்பலமாகிக்கொண்டுள்ளது.

ஸ்பாட் விசிட்
 திலீப்பை 2 நாள் காவலில் எடுத்துள்ள போலீசார், ஆதாரங்களை திரட்ட திருச்சூர் உள்ளிட்ட இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். இதற்கிடையே, நடிகையை கடத்தி ஓடும் காரில் வைத்து, அணு அணுவாக அவரை பாலியல் வன்முறை செய்தபோது, அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார் பல்சர் சுனில்.

கொடூர பிளான்
இப்படி வீடியோ எடுக்க உத்தரவிட்டதே திலீப்தானாம். அந்த வீடியோவை நடிகை திருமணம் செய்யப்போகும் நபருக்கு அனுப்பி வைக்க பிளான் செய்யப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட வீடியோவை திலீப்பிடம் பல்சர் சுனில் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பணப் பிரச்சினை
 வீடியோவை கொடுத்தப் பிறகு தருவதாகச் சொன்ன பணத்தை திலீப் கொடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டு பல்சர் சுனில் விவகாரத்தை வெளியே கசியவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திலீப்பின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post