பிக் பாஸில் அடுத்த பரபரப்பு... காயத்ரியுடன் சண்டைக்கு போகும் நமீதா..!

விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

ஒரு புறம் இந்த நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ இல்லை என்று பல்வேறு ஆதாரங்களை நெட்டிசன்கள் வெளியிட்டாலும், மறுபுறம் நிகழ்ச்சியை பார்த்து கொண்டு தான் இருகிறார்கள்.

அதற்கு ஏற்றார் போன்று தினமும் எதாவது சண்டைகள், அழுகை என்று எதாவது அரங்கேற்றப்படுகிறது.

நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் நடிகை நமீதா, நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பற்றி கணேஷிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது, காயத்ரி எல்லோரையும் ஆட்டி படைக்க நினைப்பதாகவும், தான் ஒரு ரவுடி என்று நினைத்துக்கொண்டு இருப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும், நீ ரவுடின்னா நான் பெரிய ரவுடி, காயத்ரி எப்படி என்னை ஆட்டி படைக்க பார்க்கிறார் என்று பார்க்கலாம் என்று கூறுகிறார்.

ஆனால், காயத்ரி முன்பு சாதாரணமாகவே பேசுகிறார். இனி வரும் நாட்களில் இவர்கள் இருவருக்கும் இடையில் தான் சண்டை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், ஒருவரை ஒருவர் தாக்கி பேச வைத்து டிஆர்பி-யை ஏற்றுகிறார்கள் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.


Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post