நானாக இருந்தால் பிக்பாஸ் வீட்டிலிருந்து நமீதாவை வெளியேற்றியிருப்பேன்! ஆர்த்தி!!!

எனக்கு மட்டும் அந்த வாய்ப்பு இருந்தால் நான் ஆர்த்தியை வெளியேற்றியிருப்பேன் என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும், ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மக்களின் வாக்குகள் அடிப்படையில், அனுயா, கஞ்சா கருப்பு மற்றும் ஆர்த்தி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர்.

இதில், ஸ்ரீ மற்றும் பரணி ஆகியோர் மன அழுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டனர். இதில், பிக்பாஸ் குடும்பத்திலிருந்து பரணி ஒதுக்கப்பட்டதன் விளைவாக அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டு, அவராக முன்வந்து வெளியேறினார்.

தற்போது 21வது நாளாக கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் குடும்பத்திலிருந்து மக்களின் வாக்குகள் அடிப்படையில் ஆர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளார். வெளியேறிய அவரிடம் கமல்ஹாசன் சில கேள்விகள் கேட்டார், ஆர்த்தியும் சில கேள்விகள் கேட்டார்.


நீங்கள் முதலில் வெளியேற்ற நினைத்திருந்தால் யாரை வெளியேற்றியிருப்பீர்கள் என்று கமல், ஆர்த்தியிடம் கேட்டார். அதற்கு ஆர்த்தி, எனக்கு அந்த வாய்ப்பு இருந்தால் நான் முதலில் நமீதாவை வெளியேற்றியிருப்பேன் என்றார். அவர், ஒரு வேளையும் செய்யமாட்டார்.

உடம்பு சரியில்லை என்று ஓய்வு எடுத்துக் கொள்வார் என்று குற்றச்சாட்டு வைத்தார். இதையடுத்து, என்னை வெளியேற்றியதற்கு என்ன காரணம் சார் என்று ஆர்த்தி கமலிடம் கேட்டார். நீங்கள் வீட்டிற்கு சென்றவுடன், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என்று கூறியுள்ளார்.




Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post