சந்தோசத்தில் கட்டிப் பிடிக்கப் போன ஜூலி.. நோஸ் கட் கொடுத்த நமீதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி நடிகை நமீதாவை கட்டிப்பிக்க சென்றார்.

ஆனால் அதனை மறுத்த நமீதா ஜூலியை போய் உட்காரு என்றார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை ஆர்த்தி நேற்று வெளியேறினார்.

முன்னதாக ஜூலியின் பெட்டியையும் எடுத்துவரச் சொன்ன நடிகர் கமல்ஹாசன் வாசல்வரை வரவழைத்து டிவிஸ்ட்டு வைத்து மீண்டும் உள்ளே அனுப்பினார்.

வெளியேறப் போவதை அறிந்த ஜூலி சினேகன், ஆரவ், கணேஷ் என அனைவரையும் கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

பின்னர் மீண்டும் உள்ளே வந்த அவர், திரும்பவும் அனைவரையும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.

சசி ஸ்டைலில் சபதம் போட்ட ஜூலி
 ஆர்த்தி வெளியேற ஜூலிதான் காரணம் என சக குடும்பத்தினர் கருதுகின்றனர். ஜூலியும் எனது போட்டியாளர் ஆர்த்திதான் அவரை அனுப்பிவிட்டுதான் நான் வெளியே செல்வேன் என சசிகலா ஸ்டைலில் சபதம் எடுத்திருந்தார்.


நமீதாவை கட்டிப்பிடிக்க சென்ற ஜூலி
இந்நிலையில் தன்னை கார்னர் செய்து வந்த ஆர்த்தி வெளியேறியதும், தான் பிக்பாஸ் வீட்டில் நீடிப்பதும் ஜூலி யை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. இதனை கொண்டாடுவதற்காக பிக்பாஸ் வீட்டின் படுக்கையறைக்கு சென்ற அவர் அங்கிருந்த நமீதாவை கட்டிப்பிடிக்க சென்றார்.

 போம்மா.. போய் உட்காரு
அப்போது கட்டிப்பிடிக்க மறுத்த நமீதா, போம்மா, போய் உட்காரு என்றார். இதனால் ஜூலியின் முகம் சட்டென மாறியது. இதைத்தொடர்ந்து பேசிய நமீதா எனக்கு நெருக்கமானவர்களைதான் நான் கட்டிப்பிடிபேன் என்றார். இதனை மக்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினார்.

அழுதே சாதிக்கும் ஜூலி
நிகழ்ச்சியில் ஜூலியின் நடவடிக்கைகள் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி மக்களையும் வெறுப்பேற்றி வருகிறது. ஜூலி அழுதே காரியத்தை சாதித்து வருகிறார் என்றும் எப்படி நடந்துக்கொண்டால் நிகழ்ச்சியில் நீடிக்கலாம் என்பதையும் நன்கு புரிந்து வைத்துள்ளார் என்றும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post