பணம் சம்பாதிக்க 'நம்மை முட்டாளாக்கிறார்கள்.. உண்மை முகத்தை அம்பலப்படுத்திய நமீதா..!!!


நம்மை முட்டாளாக்கி பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகை நமீதா கூறியுள்ளார்.

பிரபல தனியார் தொலைகாட்சியில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.

இந்த நிகழ்ச்சியில் வாரத்தின் இறுதி நாட்களில், அந்த வாரம் நடந்தவைகளை போட்டியாளர்களுக்கு கமல் போட்டு காட்டி, அவர்களின் தவறை சுட்டிக்காட்டுகிறார்.

அதே போன்று, ஒருவர் மற்றவரிடம் தனிப்பட்ட முறையில் பேசுவதையும், அவர்கள் பொய் பேசுவதும் என அனைத்தையும் போட்டியாளர்கள் முன்னிலையில் ஒளிபரப்புகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த நடிகை நமீதா, அவர்கள் பணம் சம்பாதிப்பதற்பாக நாம் பேசுவதை டிவியில் போட்டு டிஆர்பி-யை ஏற்றிக்கொள்கிறார்கள். மொத்தத்தில் நாம் எல்லோரும் முட்டாள்கள் என கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கிடையே நடைபெறும் சண்டைகள், அழுகை காட்சிகளை டிஆர்பி-க்காக டிவியில் காட்டுகிறார்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அதனை நிரூபிக்கும் வகையில் போட்டியாளராக இருக்கும் நடிகை நமீதாவும் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post