என்னை சிக்க வைத்து சதி செய்தது முன்னாள் மனைவி தான் - நடிகர் திலீப்!!!!

பிரபல நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கடந்த மாதம் 10–ந்தேதி கைது செய்யப்பட்டார். ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர் கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் செல்போன் இதுவரை கிடைக்காததாலும், சாட்சிகளை திலீப் கலைக்க வாய்ப்பு உள்ளதாலும் அவருடைய ஜாமீன் மனு 24–ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் திலீப் நேற்று கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மீண்டும் முறையீடு செய்து உள்ளார். இந்த நிலையில் இந்த சதி குற்ற செயலில் தனது முன்னாள் மனைவி மஞ்சுவாரியார் தான் தன்னை சிக்க வைத்து உள்ளார் என  திலீப் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.


இது குறித்து மனோரமா ஆன் லைனில் கூறி இருப்பதாவது:-

ஒரு விரிவான ஜாமீன் மனுவில் மஞ்சு வாரியர், ADGP பி. சந்தியா, வி.ஏ. ஸ்ரீகுமார் மேனன் மற்றும் லிபர்டி பஷீர் ஆகியோரை கைகாட்டி உள்ளார்.

மஞ்சு வாரியர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் வி.ஏ. ஸ்ரீகுமார் மேனன்   ஆகியோர் எனக்கு எதிராக சதி செய்து  உள்ளனர் என நடிகர் திலீப் கூறி உள்ளார். மேலும் அவர் கூறும் போது  ADGP சந்தியா விசாரணையின் போது  மஞ்சு வாரியார் மற்றும் வி.ஏ ஸ்ரீஉகுமார் மேனன் ஆகியோருக்கு இடையில் உள்ள உறவு முறை குறித்த கேள்விக்கு பதில் சொல்லும் போது   கேமராக்களை  அணைத்து விட்டார் என திலீப் குற்றம்சாட்டினார். நடிகை மீதான தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற போது  அவர்  என்னை  இந்த வழக்கில் சிக்கவைக்க விரும்பினார்  என திலீப் கூறியதாக கூறப்பட்டு உள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post