சிநேகனுடன் நெருக்கமான ரைசா... விரைவில் காதலிக்க வைப்பேன் என சபதம்...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமாக இருக்கிறார்கள். ஓவியா தனது இயல்பான நடவடிக்கையால் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

ஜூலி, காயத்ரி வில்லத்தனத்தால் வெறுப்பை சம்பாதித்து கொண்டனர். இவர்களுடன் சினேகன் இருந்தாலும் பட்டும் படாமலும் அவர்களுக்கு உதவி வந்தார்.

சினேகனிடம் ஜூலி, காயத்ரி, நமீதா மட்டுமே நெருக்கமாக இருந்து வந்தனர். ரைசா அவரிடம் இருந்து ஒதுங்கியே இருந்தார். அந்த நேரத்தில் சினேகன் ஒரு முறை கூறும்போது, இருக்கும் கவிஞர்களிலேயே எனக்குதான் கேர்ள் பிரண்ட் அதிகம்.

அதுபோலவே ரைசாவையும் ஒரு நாள் எனது கேர்ள் பிரண்டாக்கி காட்டுவேன் என்று சபதம் எடுக்கும் வகையில் பேசி இருந்தார்.

இந்த நிலையில், பிக்பாசில் இருந்து ஓவியா, ஜூலி ஆகியோர் வெளியேறி விட்டனர். காயத்ரியும் ரைசாவை எதிரி போல பார்த்து வருகின்றனர்.


இதனால் அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சினேகன் மட்டும்தான். இதனால் சினேகனோடு ரைசா நெருக்கம் காட்டி வருகிறார்.

அவருடன் சுக துக்கங்களை பகிர்ந்து வருகிறார். சினேகனும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தனது சில்மிஷங்களை காட்ட தவறுவதில்லை.

இதனை ரைசாவும் பொருட்படுத்துவதில்லை. எனவே சினேகன் அன்று போட்ட சபதத்தை இன்று நிறைவேற்றி விட்டார் என்றே கூறலாம்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post