நடிகை ஓவியாவுக்கு நடந்த ஆபரேசன்? புதிய ஹேர்ஸ்டைலின் ரகசியம் அம்பலம்!!

குயீன் ஆப் பிக்பாஸ்' ஆக இருந்த ஓவியா வெளியேறி இருந்தாலும் ஓவியா மீதான ஈர்ப்பு குறையவில்லை. அவர் எதைச் செய்தாலும், எங்கே சென்றாலும் அது குறித்த செய்திகள் வைரலாகின்றன.

ஓவியாவுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சிலர் 'பெருமை' தேடிக்கொள்கிறார்கள்.

ஒரு பக்கம் முழுவதும் முடி இல்லாமல், இன்னொரு பக்கம் வாகு எடுத்து சீவி புதிய ஹேர்ஸ்டைலுடன் இருக்கிறார் ஓவியா. தலைப்பகுதியில் ஒரு சிகப்பு முத்திரை போல ஒரு தழும்பு இருக்கிறது.

" 'கப்பிங் தெரபி' செய்யப்பட்டதற்கான அடையாளமே அந்த தழும்பு" என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

அதென்ன கப்பிங் தெரபி(Cupping therapy)?

கப்பிங் தெரபி' என்பது கப்பை (Cup) வைத்து செய்யப்படும் பண்டைய கால சிகிச்சை முறை. இதை மட்டுமே சிறப்பு சிகிச்சையாக அளிக்கும் மருத்துவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

'ரத்தம் குத்தி எடுத்தல்' என்று என்று சொல்வார்கள். எகிப்தில்தான் இந்த கப்பிங் சிகிச்சை முறை பிறந்தது. அதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் இன்றளவும் அங்கே இருக்கின்றன.

அதுபோல, கிரேக்கத்தின் தாய் மருத்துவமாக 'கப்பிங் சிகிச்சை'யே இருக்கிறது. கிரேக்க நாட்டின் மருத்துவத்தின் தந்தை(Father of medicine) என்று அழைக்கப்படும் 'ஹிப்போகிராட்ஸ்' (Hippocrates) கூட அடிப்படையில் கப்பிங் சிகிச்சை நிபுணர் தான்.

தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அரபி மொழியில் இந்தச் சிகிச்சை முறைக்கு 'ஹிஜாமா' என்று பெயர். 'ஹிஜாம்' என்ற சொல்லுக்கு 'உறிஞ்சுதல்' என்று பொருள்.

உலகம் முழுவதும் நிறைய பிரபலங்கள் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post