லிப் டு லிப் முத்த காட்சியில் நடித்த பிரபல நடிகைக்கு நடிகரால் ஏற்பட்ட வேதனை??

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கண்டுபிடிப்புகள் யாருமே சோடை போனதில்லை. இது ஸ்ரீதேவி, ராதா, ராதிகா என பட்டியல் நீளும். அந்த வரிசையில் இடம்பிடித்தவர் ரேகா.

இவர் 1986ம் ஆண்டு சத்யராஜ் நடித்த கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிபர் டீச்சர் வேடத்தில் பாரதிராஜாவில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட். விளைவு அதே வருடம் கமலுடன் புன்னகை மன்னன் படத்தில் நடித்தார். அதில் கமலுடன் லிப் டு லிப் முத்த காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

பின்னர் வரிசையாக தமிழ், மலையாளம், தெலுங்கு என 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

கமல், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், கார்த்திக், ராமராஜன் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தார்.

ஆனால் அவருக்கு ரஜினியுடன் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இன்றளவும் உள்ளது. இவர் 1996ம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1998ல் ஒரு மகள் பிறந்தாள்.


அதன்பிறகு 2002ம் ஆண்டு முதல் மீண்டும் சினிமாவில் அம்மா, அக்கா வேடத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் மலையாளத்தில் குடும்ப பிரச்னைகளை தீர்க்கும் ரியாலிட்டி ஷோவையும் நடத்தி வருகிறார்.

சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது அவர் நுங்கம்பாக்கத்தில்தான் இருந்தார். அப்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post