இவருக்கு தயவுசெஞ்சு ஒட்டு போடாதிங்க..! நடிகை ரைசா வேண்டுகோள்!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி தடபுடலாக தொலைகாட்சி சேனல்களை மிரட்டி கொண்டிருந்தது. ஆனால், ஓவியா வெளியேறிய பின்பு கதையே இல்லாத படம் போல சுவாரஸ்யமே இல்லாமல் போனது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 37% குறைந்து விட்டது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு லக்சூரி பட்ஜெட் பொருட்களை தேர்வு செய்வதில் பிந்து மாதவிக்கும், ரைசாவுக்கும் பிரச்சனை வெடித்தது.


நேற்று காயத்ரி ரகுராமின் பேச்சை கேட்டு ரைசா ஏளனமாக சிரித்தார் என காயத்ரி ரகுராம் பொங்கினார்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் நடிகை ரைசா ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதன்படி, நடிகர் ஷக்திக்கு ஒட்டு போட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரால் வீட்டில் எல்லா பிரச்னைகளும் வருகிறது என்றும், எனக்கு வீட்டில் இருக்கவே பயமாக உள்ளது என்றும் அதனால் அவருக்கு தயவு செஞ்சு ஒட்டு போடாதிங்க என்று கூறியுள்ளார் நடிகை ரைசா.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post