நடிகை ரோஜா பற்றி வாட்ஸ் அப்பில் பரவிய தகவல் – அதிர்ச்சியான ரசிகர்கள்!!!!

சூரியன், செம்பருத்தி, காவலன், கில்லாடி உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் ரோஜா. ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக உள்ளார். அடிக்கடி அதிரடியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தும் ரோஜாவை பற்றி சமீபத்தில் இணைய தளத்தில் அவர் உயிருடன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் பரவியது.

இதுகுறித்து விசாரித்து ரோஜாவுக்கு நிறைய போன் அழைப்புகள் வந்தது. இதையடுத்து கோபம் அடைந்த ரோஜா வதந்தி பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறார்.இதுகுறித்து ரோஜா கூறும்போது,’போலியாக தயாரிக்கப்பட்ட எனது படத்தை யாரோ பயன்படுத்தி நான் இறந்துவிட்டதாக என்னைப்பற்றி இணைய தளத்தில் வதந்தி பரப்பி உள்ளனர்.


இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள்’ என்றார். ரோஜா மட்டுமல்ல மேலும் சில நட்சத்திரங்கள்பற்றி அவ்வப்போது இதுபோன்ற வதந்திகள் இணைய தளம், வாட்ஸ் அப் மூலம் பரப்பப்பட்டுவருகிறது.

குறிப்பாக நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாகவும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் பலமுறை வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். 2 ஆண்டுக்கு முன் ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவரைப்பற்றி வதந்தி பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post