பிரபல நடிகையின் அண்ணன் மகள் திடீர் மாயம்..... அதிர்ச்சியில் குடும்பம்!!!!!

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும்,நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரர் அருண் மொழி வர்மனின் மூத்த மகள் அப்ரீனா ஐந்து தினங்களுக்கு முன்பு காணாமல் போனார்.

17 வயதான அப்ரீனா +2 படிக்கிறார், கடந்த 6ஆம் தேதி முதல் காணாமல் போகி இன்றோடு 5 நாட்கள் ஆகின்றது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர் பேரில் அவர்கள் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்கள் ஆனாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.


“சர்ச் பார்க் பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் எங்களுக்கு சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கேமராக்கள் வேலை செய்யாததால் போதுமான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.

காவல் துறைக்கும் போதிய ஆதாரங்கள் பள்ளி அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை. பள்ளி மெத்தனம் காட்டுவது போல் தோன்றுகிறது,” என நடிகை லலிதா குமாரி தெரிவித்துள்ளார்

படத்தில் இருக்கும் அப்ரீனா குறித்து தகவல் தெரிந்தால் 9176617337 என்ற என்னை தொடர்பு கொள்ளவும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post