பிக்பாஸ் வீட்டில் ஆரவ் சொன்ன ஒரு வார்த்தையால் கடுப்பான ஹரிஷ்..!!!!

பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு தனியாக வீட்டில் தங்கவைக்கபட்டிருந்த நடிகை சுஜா வருணி மீண்டும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். இந்நிலையில், இன்றைய டாஸ்க் வழக்கம் போல ஒருவருக்கொருவர் பிரச்னை செய்துகொள்வது போல தான் இருந்தது.

அப்போது, யார் இந்த பிக்பாஸ்-ல் வெற்றி பெற கூடாது? என்று நினைகிறீர்கள் என்று கேள்விக்கு வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து ஆலோசித்து ஒருவரை கூறிப்பிட்டு கூற வேண்டும்.

அந்த வகையில், அனைவரும் தனது கருத்தை தெரிவித்தார்கள். நடிகர் வையாபுரி நடிகர் ஹரிஷ்-ஷை பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்துவிட கூடாது என்று கூறினார். பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டு ஐம்பது நாட்கள் கழித்து வந்து அவர் ஜெயிப்பதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது என்று கூறினார்.


அதே போல ஆரவ்-வும் தனது பதிலை கூறினார். ஆனால், அவர் நாங்க எல்லாம் சீனியர்கள். பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே பல பிரச்னைகளை சந்தித்து வந்துள்ளோம்.

இந்நிலையில், திடீரென வந்து வெற்றி பெறுவதை ஏற்றுகொள்ள முடியாது என ஹரிஷ் பெயரை கூறினார்.

இதனை கேட்ட ஹரிஷ்-ன் முகம் சிவந்தது ஆமாம் அவங்க எல்லாம் சீனியர்ங்க அதனால் நானே இந்த டாஸ்கை செய்கிறேன் என்று கடுப்பாக கூறினார்.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post