அனிதா இல்லத்திற்கு சென்ற விஜயை பாராட்ட மாட்டேன் – இயக்குனர் சேரன் அதிரடி!!!

நீட் தேர்வு பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்தார். அனிதாவின் குடும்பத்துக்கு நிதியுதவியும் அளித்துள்ளார்.

1176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வால் மருத்துவக் கல்வி படிக்க முடியாமல் போனவர் அனிதா. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். இறுதியில் கடந்த 1-ம் தேதி (செப்டம்பர் 1) அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள், தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் அறிக்கை வெளியிட்டு சமூகவலைதளத்தில் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்கள்.திரையுலக பிரபலங்களில் ஜி.வி.பிரகாஷ் முதல் நபராக, அனிதா தற்கொலை செய்த அன்றே அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அவருக்குப் பிறகு நடிகர் விஜய் அனிதாவின் குடும்பத்தினருக்கு இன்று (செப். 11) நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருமே ட்விட்டர் தளத்தில் தங்களுடைய இரங்கலோடு நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


அனிதாவின் இல்லத்தில் இருந்த அவருடைய உருவபடத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தினருடன் சில மணித்துளிகள் விஜய் பேசிக் கொண்டிருந்தார்.

காவிரி பிரச்சினை, இலங்கைப் பிரச்சினை, ஜல்லிக்கட்டு, பணமதிப்பு நீக்கம், விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தொடர்ச்சியாக விஜய் குரல் கொடுத்துவருவது நல்ல விஷயம் என்று சமூகவலைதளத்தில் பலரும் பதிவிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான சேரன் அவர்களும் இது குறித்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது விஐய் போனது நல்ல விசயமே இதற்காக வரை பாராட்டமாட்டேன். இது அவரின் கடமை என கூறியுள்ளார்.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post