பிரபல திருட்டு இணையத்தளமான தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது!!!

பிரபல திருட்டு இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் அட்மின் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய திரைப்படங்கள் திரைக்கு வந்த அடுத்த ஒரு மணி நேரத்திலே இணையதளங்களை திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு வந்தது.

அதில் மிகவும் பிரபலமான இணையதளமான தமிழ் ராக்கர்ஸ், திரைத்துறையினரருக்கு பெருத்த தலைவலியாக இருந்து வந்தது.


இந்நிலையில், கடந்த மே மாதம் 7ம் தேதி, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், சென்னை காவல்துறை கமிஷனரை நேரில் சந்தித்து இது குறித்து புகார் அளித்தார்.

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில், இன்று தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கவுரி சங்கரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், முழுமையான விசாரணைக்குப் பின் இணையதள விபரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post