ஆரவை நோஞ்சான் என கூறி அசிங்கப்படுத்திய சினேகன்!!!

பிக் பாஸ் அனுபவம் எப்படி இருந்தது?

ஒரு பெரிய நிதானம் வந்திருக்கிறது.என்னை முழுவதும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஏதோ ஒரு மாற்றம் நிகழப்போகுதுனு தெரியும். ஆனால், இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்னு தெரியவில்லை.

இந்தச் சமூகம் என்னை ஏற்றுக்கொள்ளுமா, இந்தச் சமூகத்தை நான் ஏற்றுக் கொள்வேனானு தெரியவில்லை.

ஆனால், இந்த 100 நாள்களில் நான் போட்டுயிருந்த முகமூடியை நானே கிழித்துத் தூக்கி எறிந்துவிட்டேன். என்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை நானே மக்களிடம் சொல்லிவிட்டேன்.
Snehan ஆரவ்வை உங்கள் போட்டியாளராக நினைக்கவில்லையா?


நண்பன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், எதிரி பலசாலியாக இருக்க வேண்டும். என்னைவிட பலசாலி, திறமையாளன், அறிவாளி, தந்திரக்காரன் என எல்லா விதத்திலும் இருந்த கணேஷ் வெங்கட்ராமைதான் எதிரியாகப் பார்த்தேன். நோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது

ஆரவ் ‘பிக் பாஸ்’ டைட்டிலுக்குத் தகுதியானவர் என்று நினைக்கிறீர்களா?

அதுவும் பிக் பாஸூக்கே வெளிச்சம். ஏன்னா, எல்லா அக்ரீமென்ட்டும் போட்டதுக்குப் பிறகு பிக் பாஸே சொல்கிறார், ‘இங்கு இருக்கும் சட்ட திட்டங்களை மாற்றுவதற்கும் ஒருவரை வெளியே அனுப்புவதற்கும் ஒரு முடிவு எடுப்பதற்கும் பிக் பாஸூக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது.

ஆனால், அதற்கான காரணத்தை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்று.
Aarav கட்டிப்பிடி வைத்தியத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தினது யார்?

‘டைனமிக் செல்ப் அவைக்’ என்ற தன்னம்பிக்கை முனைப்பு இயக்கத்துக்குப் போனோம். அரவணைத்து அன்புச் செலுத்துவது மானிடத்தின் மேன்மை என்பதைப் புரிந்துகொண்டோம்.

பயிற்சி எடுத்தவர்களுடன் நாங்கள் அதைப் பகிர்ந்துகொண்டோம். அதுவும், இருவரும் சம்மதித்தால்தான். இல்லையென்றால் கை குலுக்கியும், கண்களைப் பார்த்தும்கூட வாழ்த்துச் சொல்லலாம்.

ஆனால், கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்வது தாய்மையின் வெளிப்பாடாக இருக்கும் என்ற நோக்கத்துடன்தான் அதைச் செய்தோம்.

- vikatan -

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post