தாய் இறந்த சோகத்தால் பிரபல நடிகர் செய்த விபரீதம் - அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

தமிழில் இதுதாண்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன போன்ற படங்களில் நடித்திருப்பவர் டாக்டர் ராஜசேகர். சமீபத்தில் இவரது தாயார் மரணம் அடைந்துள்ளார். அதிலிருந்து ராஜசேகர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறபடுகிறது.
 
இந்நிலையில் ராஜசேகரின் உறவினர்கள் எவ்வளவு நாள் இப்படியே இருக்க போகிறாய், அதிலிருந்து மீண்டு வா என்று  கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த அவர், அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு, காரை எடுத்துகொண்டு வேகமாக வீட்டிலிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது.
 
இதனை தொடர்ந்து ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் கார் சென்றபோது எதிரில் வந்த காருடன் மோதி லேசாக மோதி விபத்தில் சிக்கி ஹைவே டிவைடரில் மோதியுள்ளது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய காரில் வந்தவர் கொடுத்த தகவலின்  பேரில், போலீஸார் விசாரித்தனர்.
 
இந்நிலையில் ராஜசேகரின் மனைவி ஜீவிதா கொடுத்த தகவலின் அடிப்படையில், அவரது தாய் இறந்த சோகத்தால் மன அழுத்தத்தில் இருப்பதை விலக்கினார். இதனால் மனிதாபிமான அடிப்படையில் போலீஸார் வழக்கு எதுவும் பதிவுசெய்யாமல்  விடுவித்துள்ளனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post