ஆபாச வீடியோ அனுப்பியவனை ஃபேஸ்புக்கில் அம்பலப்படுத்திய பிரபல நடிகை!!!

மலையாள நடிகை துர்கா கிருஷ்ணா தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கயவனை ஃபேஸ்புக்கில் அம்பலப்படுத்தி தக்க தண்டனை அளித்துள்ளார் நடிகை துர்கா கிருஷ்ணா.

நடனக் கலைஞரான கேரளாவை சேர்ந்த துர்கா கிருஷ்ணா மலையாள படங்களில் நடித்து வருகிறார். அவரது பேஸ்புக் பக்கத்திற்கு தொடர்ந்த ஒரு நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனை தைரியமாக எதிர் கொண்டுள்ளார் துர்கா கிருஷ்ணா. கயவனை ஃபேஸ்புக்கில் அம்பலப்படுத்தி தக்க தண்டனை அளித்துள்ளார்.
 
இதுபோன்ற நபர்களுக்கு கண்டனம் தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.


தனக்கு ஆபாச வீடியோ அனுப்பவியனின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு அதில், நான் கோழிக்கோட்டை சேர்ந்த துர்கா கிருஷ்ணா. என் சகோதர சகோதரிகளே நானும் உங்களில் ஒருத்தி.

உங்களில் எத்தனை பேர் உண்மை சகோதரர்கள் என்பது தெரியவில்லை. உங்களில் எத்தனை பேர் நரிகள். அதாவது பகலில் நல்லவர்கள் போன்றும், இரவானால் செக்ஸ் ஆசையை வெளிப்படுத்தி உண்மை நிறத்தை காட்டுபவர்கள் என்றும் தெரியவில்லை.

அத்தகைய நரிகளுக்கு மனைவி, சகோதரி, தாய், 2 வயது குழந்தை அல்லது 70 வயது பாட்டி என்று அடையாளம் தெரியாது.

அவர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள் அனுப்பி தங்களின் செக்ஸ் ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு வயது, உறவு எல்லாம் முக்கியம் இல்லை எதிர்பாலினம் தான் முக்கியம்.
 
என் சகோதரர்களுக்கு ஒரு கோரிக்கை. உங்களின் சகோதரிகளை சைக்கோக்களிடமிருந்து காப்பாற்ற உடனே நடவடிக்கை எடுங்கள்.

கல்வி முறையிலே இது போன்ற விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post