அதிமுக எம்பிக்கள் போயஸ் தோட்டத்துல பூப்பறிச்சிட்டிருக்கீங்களா? - டி.ஆர். அதிரடி கேள்வி!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் வாய்திறக்காமல் உள்ளதாக நடிகரும் லட்சிய திமுகவின் தலைவருமான டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக எம்பிக்கள் வீரத்துடன் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

லட்சிய திமுகவின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனக்கான பாணியில் கோர்வையாக பேசிய அவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் வாய்திறக்காமல் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

அதிமுக எம்பிக்கள் போயஸ் தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருக்கிறார்களா என்று கேள்வி கேட்டார்.

டெல்லி சென்ற அதிமுக எம்பிக்களை பிரதமர் சந்திக்காதது குறித்து கருத்து தெரிவித்த டி.ஆர் உங்களின் லட்சணம் அப்படி உள்ளது என அவர்களை சாடினார்.எம்பிக்கள் வீரத்துடன் கேள்விக் கேட்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகத்தில் யாரும் வாலாட்டக்கூடாது என்றும் டிஆர் வலியுறுத்தினார்.

தான் பூங்காநகர் எம்எல்ஏவாக இருந்தபோது பலமுறை அரசை எதிர்த்து கேள்வி கேட்டதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

 ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறிய டி.ராஜேந்தர் அதனை எதற்காகவும் விட்டுகொடுக்க முடியாது என்றார்.

 தமிழர்களின் பாரம்பரியவிளையாட்டான ஜல்லிக்கட்டை பாஜக ஆதரிவில்லை என்றும் டி.ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post