ஜல்லிகட்டுக்கு எதிராக கருத்து சொன்ன கிரண்பேடிக்கு பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி...!

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், ஜல்லிக்கட்டிற்கு எதிராக கருத்த தெரிவித்த பாண்டிச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு, ஆர்.ஜே.பாலாஜி தக்க பதிலடி கொடுத்து பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2 வருடங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என தமிழக அரசியல்வாதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பேரணிகளும் நடைபெற்றன.
 
இந்நிலையில், ஜல்லிக்கட்டு பற்றிய விவாதத்தை ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்தியது. அதில் நடிகை குஷ்பு, சுஹாசினி, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டு பேசினார். 
 


அப்போது கருத்து தெரிவித்த கிரண்பேடி “நான் ஜல்லிக்கட்டை தொலைக்காட்சியில்தான் பார்த்துள்ளேன். அப்போது துள்ளி ஓடும் மாடுகளை, வாலிபர்கள் துன்புறுத்துவதை பார்த்தேன். மாட்டின் வாலை அவர்கள் பிடித்து இழுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே ஜல்லிக்கட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது சரியான ஒன்றுதான்” எனக் கூறினார்.
 
அவருக்கு பதிலளித்த ஆர்.ஜே.பாலாஜி “ கேராளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் யானை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன் காலில் சங்கிலி போட்டு கட்டி வைத்துள்ளனர். யானைகள் சந்தோஷமாகவா அங்கே நிற்கின்றன?.. அதேபோல், டெல்லிக்கு மிக அருகில் உள்ள குஜராத்தில், ஆயிரக்கணக்கான சுமைகளை ஒட்டகத்தின் மீது ஏற்றுக்கிறார்கள். அது ஏன் தடை செய்யப்படவில்லை. ஏன் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டின் மீது மட்டும் கை வைக்கிறீர்கள்?.. 
 
நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால், ஜல்லிக்கட்டு மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என நான் கருதுகிறேன். அப்படி பார்த்தால், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்தான் தீர்ப்பளித்தது. ஆனால், கர்நாடக மாநிலம் அதை ஏற்கவில்லை. எந்த நீதிமன்றமும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே’ என மடக்கினார். 
 
ஜல்லிக்கட்டிற்கு ஆதவாக அவர் பேசியதை பாராட்டி பலரும் சமூக வலைத்தளங்கல்ளில், அந்த வீடியோவை பதிவு செய்து வருகின்றனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post