எம்.ஜி.ஆரை எதனால் எம்.ஆர்.ரா­தா சுட்டார் தெரியுமா..?

எம்.ஜி.ஆர். துப்­பாக்­கியால் சுடப்­பட்டு 50 ஆண்­டுகள்  நிறை­வு­பெற்­று­விட்­டன. ஆனால், இன்­ற­ளவும் எம்.ஆர்.ராதா நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்டின் பர­ப­ரப்பு அவ்­வ­ளவு எளிதில் அடங்­கி­விட­வில்லை.
 
என்ன நோக்­கத்­திற்­காக ராதா துப்­பாக்­கியைத் தூக்­கினார்? என்ற கேள்­விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் சாதா­ரண மக்­க­ளிடம் மேலோங்­கியே இருக்­கி­றது. 1967ஆம் ஆண்டு, ஜன­வரி 12ஆம் திகதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். வீட்டில் துப்­பாக்கிச் சூடு நடந்­தது. தான் கொண்டு போயி­ருந்த துப்­பாக்­கியில் மூன்று தோட்­டாக்­களை மட்­டுமே நிரப்­பி­யி­ருந்தார் ராதா.
 
எம்.ஜி.ஆரை நோக்கி துப்­பாக்­கியின் விசை அழுத்­தப்­பட, எம்.ஜி.ஆரின் இட­து­காதை ஒட்டி துப்­பாக்கி ரவை துளைத்துக் கொண்டுபோனது. பின்னர் அதே துப்­பாக்­கியால் தனது நெற்றிப் பொட்­டிலும், தோளிலும் இரண்டு குண்­டுகள் பாய, இரத்த வெள்­ளத்தில் மிதந்தார்  எம்.ஆர்.ராதா. மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட இரு­வரும் உயிர் பிழைத்­தனர்.    
 
"என் முகத்­துக்கு நேராக குண்டு பாய்ந்து வந்­தது. நான் எப்­படிப் பிழைத்தேன்?" என தட­ய­வியல் நிபுணர் சந்­தி­ர­சே­க­ர­னிடம் ஆச்­சர்­யத்­தோடு கேட்டார் எம்.ஜி.ஆர். ராதா பயன்­ப­டுத்­திய ரவை­களை தீவி­ர­மாக ஆராய்ந்து ஒரு  முடி­வுக்கு வந்தார் சந்­தி­ர­சே­கரன். 'அந்தத் துப்­பாக்கி ரவைகள் பதி­னைந்து வரு­டங்­க­ளுக்கு முன்பு வாங்­கப்­பட்­டவை. அவற்றை ஒரு டப்­பாவில் போட்டு அடிக்­கடி பயன்­ப­டுத்தும் மேசை லாச்­சியில் வைத்­தி­ருந்தார்.
 
அங்கிருந்த துப்­பாக்கி ரவைகள் ஒன்­றுக்­கொன்று உருண்டு தேய்ந்­ததால், ரவையின் மேல் பிணைக்­கப்­பட்­டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடி­மானம் தளர்ந்து போய்­விட்­டது. அத­னால்தான் இரண்டு பேரின் உயி­ருக்கும் ஆபத்து ஏற்­ப­ட­வில்லை' என விளக்­கினார்.    
 
ராதா­வுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நீண்­ட­நாட்­க­ளாக  இருந்­து­வரும் கருத்து வேறு­பா­டுகள் அனைத்தும் நீதி­மன்­றத்தில் பதிவு செய்­யப்­பட்­டன. தொழி­லாளி திரைப்­பட சூட்­டிங்­கின்­போது எம்.ஜி.ஆர், எம்.ஆர்.  ராதா சம்­பந்­தப்­பட்ட ஒரு காட்­சியில், எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ் இனி தொழி­லா­ளர்­களின் நம்­பிக்கை நட்­சத்­திரம்' எனப் பேச வேண்டும்.
 
‘இந்த பஸ்தான் இனி தொழி­லா­ளர்­களின் உத­ய­ சூ­ரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர். இதனால் கோப­மான எம்.ஆர்.ராதா, ‘சினி­மா­வுக்­குள்ள, உன் கட்சி சின்­னத்தைக் கொண்டு வராதே. வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்­டி­ருக்­கிறார்.   
 
இதனால் எம்.ஜி.ஆர். படப்­பி­டிப்பை நிறுத்த, தயா­ரிப்­பாளர்  சின்­னப்பா தேவர் வந்து சமா­தானப்படுத்­தினார்.
 
இறு­தியில் குறிப்­பிட்ட அந்தக் காட்­சியில் ‘நம்­பிக்கை நட்­சத்­திரம்’ என்று பேச வைத்தார் சின்­னப்பா.  
 
இது­த­விர, காம­ரா­ஜரைக் கொல்ல சதி செய்­யப்­ப­டு­வ­தா­கவும் ராதா எழு­திய ஒரு கட்­டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேத­னைக்­குள்­ளாக்­கி­யி­ருந்­தது. வழக்கு  விசா­ர­ணையில், எம்.ஆர்.ராதாவை வள­ர­வி­டாமல் சினிமா வாய்ப்­பு­களை எம்.ஜி.ஆர்  கெடுத்தார் என்­றெல்லாம் காரணம் சொல்­லப்­பட்­டது.   
 
'எம்.ஜி.ஆரும் அவ­ரு­டைய துப்­பாக்­கியால் என்னை நோக்கிச்  சுட்டார்' என ராதா தரப்பில் சொல்­லப்­பட, அதை முறி­ய­டித்­தது தட­ய­வியல் துறை. கே.சி.பி. கோபா­ல­கி­ருஷ்ணன், பி.சந்­தி­ர­சே­கரன் மற்றும் துப்­பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்­பி­ர­ம­ணியம் ஆகியோர் அடங்­கிய குழு, வெடிக்­கப்­பட்ட 3 குண்­டு­களும் ராதாவின் துப்­பாக்­கியில் இருந்து மட்­டுமே வெளி­யே­றி­யது என நிரூ­பித்­தனர்.  
 
இந்த சம்­பவம் நடந்­த­போது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. தயா­ரிப்­பாளர் வாசு  மட்­டும் தான். அவர் தன்­னு­டைய சாட்­சி­யத்தில், 'எம்.ஜி.ஆரை சுட்­டு­விட்டு அதே  துப்­பாக்­கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா' என வாக்­கு­மூலம்  கொடுத்தார்.   


 
நீதி­மன்­றத்தில் வாதம் நடந்­த­போது பல சுவா­ரஸ்ய சம்­ப­வங்­களும்  நடந்­தன. எம்.ஆர்.ராதா லைசென்ஸ் இல்­லாத துப்­பாக்­கியால் சுட்டார் என அரச தரப்பு சட்­டத்­த­ரணி குற்றம் சாட்டிக்கொண்டே போக, ஒரு கட்­டத்தில் கோப­மான ராதா, ' யுவர் ஆனர். வழக்கில் குறுக்­கி­டு­வ­தற்கு மன்­னிக்­கவும். லைசென்ஸ் இல்­லாத துப்­பாக்­கியால் ராதா சுட்டார் என அரசதரப்பு சட்­டத்­த­ரணி சொல்­வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
 
துப்­பாக்­கியால் சுட்­டதில் நானும் சாக­வில்லை. ராமச்­சந்­தி­ரனும் சாக­வில்லை. யாரையும் கொல்­லாத ஒரு துப்­பாக்­கிக்கு லைசென்ஸ் தேவையா?' எனக் கேட்க, அதிர்ந்­தது நீதி­மன்றம்.     
 
துப்­பாக்கிச் சூடு வழக்கு மிக விரை­வாக நடந்­தது. அதே ஆண்டு நவம்பர் 4ஆம் திக­தி­யன்று நீதி­பதி லட்­சு­மணன் தீர்ப்பை வாசித்தார். 'அர­சியல்  முன்­வி­ரோதம் கார­ண­மாக ராதா தன் துப்­பாக்­கியால் எம்.ஜி.ஆரை சுட்டார்.
 
பிறகு தன்­னைத்­தானே இரண்டு முறை சுட்­டுக்­கொண்டார். இதை அர­ச ­த­ரப்பு ஆதா­ர­பூர்­வ­மாக  நிரூ­பித்­துள்­ளது' எனக் கூறி, ராதா­வுக்கு ஏழாண்டு சிறைத் தண்­டனை வழங்­கப்­பட்­டது. 
 
தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்­நீதி மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்தார். மேன்­மு­றை­யீடு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது. மீண்டும் உச்ச நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்தார். அங்கே தண்­டனை காலம்  ஐந்­தாண்­டு­க­ளாகக் குறைக்­கப்­பட்­டது. சிறையில் அவ­ரு­டைய நன்­ன­டத்தை கார­ண­மாக நான்கு ஆண்­டுகள் நான்கு மாதங்­களில் அவர் விடு­த­லை­யானார்.  
 
துப்­பாக்கிச் சூடு வழக்கிலிருந்து வெளியே வந்­து­விட்­டாலும், 1975இல் இந்­திராகாந்தி அரசின் நெருக்­கடி நிலை அறி­விப்­பின்­­போது, மிசா  சட்­டத்­தின்கீழ் கைது செய்­யப்­பட்டார் ராதா. 
 
'திரா­விடர் கழ­கத்­துடன்  தொடர்­பில்லை' என எழுதித் தந்தால் விடு­தலை செய்­வ­தாகக் கூறியும், நிபந்­த­னையை ஏற்க மறுத்து பதி­னொரு மாதங்கள் சிறையிலிருந்தார் எம்.ஆர்.ராதா.   
 
கடை­சி­வரை, எந்தப் பேச்­சு­வார்த்­தையும் வைத்துக்கொள்­ளாமல் இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்­தித்துக் கொண்­டது பெரி­யாரின் இறப்­பின்­போ­து தான். அப்­போ­து­கூட,' உங்­க­ளுக்கு பக்­கத்தில் இருப்­ப­வர்­களை நம்ப வேண்டாம்' என ராதா கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு.    
 
அதன்பின் சிங்கப்பூரிலும் மலேஷியாவிலும் வெற்றிகரமாக நாடகம்  நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் திகதி இறந்தார். 
 
அப்போது முதல்வராக இருந்த  எம்.ஜி.ஆர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முன்வந்தாலும், ராதா  குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அரச மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.                                         
 
(நன்றி:விகடன்)      

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post