பல சர்ச்சைக்குரிய குற்ற சம்பவங்களில் சிக்கிய 10 இந்திய சுவாமிஜிகள் பற்றி தெரியுமா..?

இந்தியா பல மதங்கள், ஜாதிகள் அடங்கிய நாடு. இந்துத்துவம் மொலோங்கிக் காணப்படும் நாடு.

இந்துக்கள் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதால் இந்தியாவில் போலி சாமியார்களும் அதிகம்.

சிலர் ஆரம்பத்தில் சுவாமிஜிக்களாக உருவாகி, பிறகு பல சர்ச்சைக்குரிய குற்ற சம்பவங்களில் சிக்கியும் உள்ளனர்.

 சிலருக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனையும் அளித்துள்ளது...

1
ஆசரமம் பாபு - 2014ல் இவர் தனது ஜோதாபூர் ஆசிரமத்தில் 16 வயது பெண்ணை கற்பழித்ததாக புகார் ஒன்று எழுந்தது. போலீஸ் விசாரணை நடத்தியது, அதில் ஆசரமம் பாபு தான் அப்பாவி என்றும், அந்த பெண் எனது மகள் போன்றவர் என்றும் கூறினார்.

2
சுவாமி நித்தியானந்தா - திடீரென இரவு எட்டு மணி செய்திகளின் போது பிரபல டிவி ஊடகமான சன்டிவி ஒரு வீடியோவை ஒளிப்பரப்பி பரபரப்பை உண்டாக்கியது. அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என நித்தியானந்தா கூறினார்.
 3
பாபா ராம்தேவ் - டேஹெல்கா (Tehelka) எனும் இதழில் இவர் வரி ஏய்ப்பு, நிலமோசடி, மின்சாரம் திருடுதல் செய்ததாக குற்றச்சாட்டு புகார் கூறி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
4
ராஜ்நீஷ் என்கிற ஓஷோ - மிகவும் சர்ச்சைக்குரிய நபராக திகழ்ந்தவர் ஓஷோ. இவரை செக்ஸ் குரு என்றும் அழைத்து வந்தனர். 1981ல் இவரது புனே ஆசிரமத்தில் நடந்த செயல்பாடுகளால் இவர் அமெரிக்கா செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.
 5
சந்திரசுவாமி - 1996ல் லண்டன் தொழிலதிபர் ஒருவரை ஒரு லட்சம் டாலர்கள் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
6
ஜெயேந்திர சரஸ்வதி - சங்கரராமன் கொலை வழக்கில் இவர் 2004ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டார்.
 7
சத்திய சாய்பாபா - இவரது ஆசிரமத்தில் பாலியல் தொல்லைகள மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் இருந்து வந்ததாக இவரை பின்பற்றி வந்தவர்களே கூறியது பரபரப்பை எற்படுத்தியது. மேலும், முறையற்ற வகையில் நன்கொடை என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகள் பரிவர்த்தனை செய்யப்பட்ட குற்றச்சாட்டும் இவரது ஆசிரமத்தின் மேல் இருந்தது.
8
பிரேமானந்தா - கற்பழிப்பு வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்றவர்.
9
ராம்பால் - ஹரியானாவை சேர்ந்த இவர் கொலை வழக்கு குற்றவாளி. இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் இருக்கிறது.
10
பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் - கொலை, கொள்ளை மற்றும் பலாத்கார வழகுகளில் சிக்கியவர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post