பாலியல் பலாத்காரத்தை தடுத்த இளம் பெண்ணை... பூச்சி மருந்து குடிக்க வைத்த கொடூரம்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் தோல்வியடைந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை பூச்சி மருந்து குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித்துக்கு வெளிபுறத்தில் உள்ள தனது மாட்டுக் கொட்டகையில் 17 வயது பெண் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யத் துணிந்துள்ளனர். பின்னர், அவர்களை தனது பலத்தால் தடுத்ததுடன், சத்தமிட்டு அருகில் இருந்தவர்களை எச்சரிக்கை செய்தார். இதையடுத்து, மூவரில் ஒருவர் அங்கிருந்த பூச்சி மருந்தை எடுத்து, அந்தப் பெண்ணின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றி, அந்தப் பெண்ணின் உறவினப் பெண் வருவதைப் பார்த்து தப்பிச் சென்றனர்.


இதுகுறித்து அந்தப் பெண்ணின் தந்தை கூறுகையில், ''என் பெண் வலுக்கட்டாயமாக அந்த ஆண்களை தடுத்து, எச்சரிக்கை செய்தார். அப்போது எங்களது உறவினப் பெண் ஒருவர் அங்கு வர, அந்த ஆண்கள் தப்பிச் சென்றனர்'' என்றார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்ற இளைஞர்கள் அஜய் குமார், பப்பு, சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post