அன்பாக பேசி... மனைவிக்கு சர்ப்ரைஸ் கிஃப்டாக மரணத்தை பரிசளித்த கொடூர கணவன்...!

மனைவிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்று, மனைவியை கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள குர்கானில் வசித்து வருபவர் மனோஜ்(24). அவருக்கு கோமல்(22) என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியது. இதனால் கோமல் தனது பெற்றோர் வீட்டில் வசிக்கத் தொடங்கினார். இந்நிலையில் கோபமடைந்த மனோஜ், எப்படியாவது மனைவ்யை கொன்று விட வேண்டும் என்று திட்டமிட்டார்.


இதையடுத்து சர்ப்ரைஸ் கிஃப்ட் அளிப்பதாக கூறி, தனது மனைவியை வரவழைத்துள்ளார்

அவரை போன்ட்டா பார்க் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரது கண்ணை மூடச் சொன்ன அவர், தான் மறைத்து வைத்திருந்த கயிற்றால் கோமலை கொன்றுள்ளார்.

பின்னர் அவரை அங்கேயே தள்ளிவிட்டு, தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதற்கிடையில் மனோஜின் நண்பர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மனோஜை துரத்தி பிடித்து கைது செய்தனர். கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post