காலைக் கடன் கழிக்கச் சென்ற பெண்களை புகைப்படம் எடுத்தவரை தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை!

ராஜஸ்தான் மாநிலத்தில் காலைக் கடன் கழிக்கச் சென்ற பெண்களை புகைப்படம் எடுத்த துப்புரவு தொழிலாளர்களை தட்டிக் கேட்டவரை தாக்கியதில் அவர் பலியானார்.

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் நகரில் உள்ளது கச்சி பாஸ்தி. இங்குள்ள பெண்கள் வெள்ளிக் கிழமை காலை காலைக் கடன் கழிக்கக் சென்றனர். அப்போது அங்கு வந்த சுமார் 7 துப்புரவு தொழிலாளர்கள், அந்தப் பெண்களை புகைப்படம் எடுத்தனர்.

இதனை பாஸ்தி மக்கள் தட்டிக் கேட்டனர். கச்சி பாஸ்தி பகுதியைச் சேர்ந்த சிபிஎம் தலைவரும், யூனியன் தலைவருமான 55 வயதான ஜாபர் கான் தட்டிக் கேட்டார்.

புகைப்படம் எடுத்தத்தை கடுமையாக எச்சரித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு தொழிலார்கள் கான் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஸ்ட்ரோக் ஏற்பட்டு கான் இறந்தார்.


இதனால் அந்தப் பகுதியில் சில மணி நேரங்களுக்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, துப்புரவு தொழிலாளர்கள் 7 பரையும் போலீசார் கைது செய்தனர்.

திறந்த வெளியில் காலைக் கடன் கழிப்பதை தடுக்கும் வகையில், சுத்தமான இந்தியா திட்டத்தின் கீழ், காலை நேரங்களில் ரோந்து சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த துப்புரவு தொழிலாளர்களின் வேலை.

ஆனால், தங்களது பணியை மீறி, காலைக் கடன் சென்று கொண்டு இருந்த பெண்களை புகைப்படம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த கான் குடும்பத்துக்கு நகராட்சி ரூ. 4 லட்சம் கருணைத் தொகை அறிவித்துள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post