மகள்.. மாமியாரை காப்பாற்ற சென்ற இளம் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்!!

ஆலப்புழா மாவட்டம் செர்தலா பகுதியை சேர்ந்த பெண் குளத்தில் மூழ்கிய தன் மகள் மற்றும் மாமியாரை காப்பாற்ற முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சதி (42) எனும் பெண்ணின் மகள்கள் அர்ச்சனா மற்றும் அர்சா வீட்டிற்கு அருகில் இருக்கும் குளத்தில் குளித்து கொண்டிருந்தனர். அந்த குளம் சமீபத்தில் தான் தூர்வாரப்பட்டது என்றும், மழை பெய்துள்ளதால் தற்போது தண்ணீர் அதிகமாக இருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இருவரும் குளித்துக்கொண்டிருந்த போது அர்ச்சனா தவறி குளத்திற்குள் விழுந்த மூழ்க தொடங்கினார். இதனை பார்த்த அர்சா கூச்சலிடவே, அவர்களின் பாட்டி சரஸ்வதி அம்மா (82) குளத்திற்குள் குதித்து அர்ச்சனாவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

ஆனால் தண்ணீர் அதிகம் இருந்ததால் சரஸ்வதி அம்மாவும் நீரில் மூழ்க தொடங்கியுள்ளார். இதனையடுத்து சதி நீரில் மூழ்கும் இருவரையும் காப்பாற்ற குளத்தில் குதித்துள்ளார். ஆனால் சதி ஆழமான பகுதியில் மாட்டிக்கொண்டதால் அவரால் காப்பாற்ற முடியவில்லை.


அருகில் வசிக்கும் சரத் என்பவர் குளித்தில் மூழ்கிய மூவரையும் காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் மருத்துவமனையில் சேர்க்கும் போதே சதி உயிரிழந்தார். சரஸ்வதி அம்மாவும், அர்ச்சனாவும் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

சம்பவம் நடந்த போது சதி வீட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் மட்டும் இருந்துள்ளனர். சதியின் கணவர் வேணு தினக்கூலி வேலை செய்பவர் என்பதால் அன்று வேலைக்கு சென்றுவிட்டார். பிரதே பரிசோதனைக்கு பிறகு சதியின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post