ஓடும் விமானத்தில் பணிப்பெண் செய்த அருவருக்கத்தக்க செயல்... அதிர்ச்சியில் பயணிகள்!!!

பிரசித்திபெற்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகள் குடித்து மிஞ்சிய மதுவை அதன் பணிப்பெண் ஒருவர் மீண்டும் போத்தலுக்குள் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்திலேயே இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

விமானம் பயணிக்க முன்பு ரஷ்ய பயணி ஒருவர் தனது கமெராவில் வீடியோ பிடித்துக் கொண்டிருந்தார். அதில் பணிப்பெண் ஒருவர் கோப்பையில் ஊற்றப்பட்ட மதுவை மீண்டும் போத்தலில் நிரப்பும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.


பின்னர் இந்தக் காணொளியை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய அந்த ரஷ்ய பயணி, ”நீங்கள் இப்படியான செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளீர்களா எமிரேட்ஸ்” என கேள்வி எழுப்பியுள்ளார். விமானத்தின் உயர்ரக வகுப்பில் இச்செயல் அரங்கேறியுள்ளதால் பெரும் பரபரப்புக்குள்ளாகியது.

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சேவை வழங்கி வருகின்ற, ஐக்கிய அரபு நாடுகளின் பிரசித்திபெற்ற விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் இந்த காணொளி குறித்து விளக்கமளிக்கையில், ”எங்களின் தரத்தில் எந்த குறைபாடும் இருக்கப்போவதில்லை. இருப்பினும் குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post