வேறு ஆணுடன் காதல்... காதலி ஏமாற்றியதால் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை!!!

குழித்துறை அருகே ஞாறான்விளை ரெயில் தண்டவாளம் அருகே இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. அவரது உடல் ரெயிலில் அடிபட்டு உருக்குலைந்து காணப்பட்டது.

அந்த வழியாகச் சென்றவர்கள் வாலிபர் பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

பிணமாக கிடந்த வாலிபர் உடல் அருகே அவரது ஆதார் அட்டை கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் பினு (வயது 25) என்பதும், காதல் தோல்வியில் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. பாலிடெக்னிக்கில் பட்டயப்படிப்பு முடித்த இவர் தற்போது மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.


பினுவும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். சமீபகாலமாக அந்த பெண், பினுவை புறக்கணித்தார். அவருடன் பேசுவதையும் தவிர்த்தார். எதற்காக என்னை புறக்கணிக்கிறாய் என அந்த பெண்ணிடம் பினு கேட்டுள்ளார். அதற்கு உன்னை பிடிக்கவில்லை, இனிமேல் என்னுடன் பேச வேண்டாம் என அந்த பெண் கூறினார்.

காதலிக்கு தன்னை பிடிக்காமல் போனதற்கு காரணம் என்ன? என்பது பற்றி பினு விசாரித்தபோது அந்த பெண் தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு வாலிபரை காதலிப்பது தெரியவந்தது. இதனால் பினு மனம் உடைந்து இன்று காலை ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. 

பினு தற்கொலை செய்தது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பினுவின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post