பிஞ்சு குழந்தையை ஃபிரிட்ஜில் வைத்து விளையாடிய பெண்கள்... அதிர்ச்சி வீடியோ!!!

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் 8 மாத குழந்தையை அந்த குழந்தையின் பராமரிப்பாளர்கள் ஃபிரிட்ஜில் வைத்து விளையாடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இணையதளங்களில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் 2 பெண்கள் குழந்தையை ஃபிரிட்ஜில் வைத்து கதவை மூடிய பின் குழந்தையின் அழு குரல் கேட்கிறது. உடனே அந்த பெண் குழந்தையை வெளியே எடுத்து விட்டு குழந்தைக்கு ஒன்றும் ஆக வில்லை என்று கூறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. 


அந்த வீடியோவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் விளையாட்டாக இதை செய்தாலும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் தாக்குதல் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எசெக்ஸ் மாவட்ட அரசு வழக்கறிஞரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீவ் ஓ கான்னெல் தெரிவித்தார்.

இது குறித்து குழந்தையின் தாய் கூறுகையில், ‘நான் குழந்தையை என் உறவினர் மற்றும் அவருடைய நண்பரிடம் விட்டு சென்றேன். அவர்கள் விளையாட்டாக இதை செய்துள்ளனர். வேறு எந்த நோக்கமும் இருக்காது. அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இருந்தாலும் இனிமேல் என் குழந்தையை யாரிடமும் நீண்டநேரம் விட்டு செல்ல மாட்டேன்’ என கூறினார்.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post