கல்லூரி மாணவனுடன் கள்ளக்காதல்... மனைவியை அடித்து கொன்ற கணவ பகீர் வாக்குமூலம்!!!

பெரியகுளம் இந்திர புரியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி. ஆட்டோ டிரைவர். இவருக்கும் அழகுமீனா (25) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 வயதில் ஒரு மகன் உள்ளார்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்படவே அழகுமீனா கோபித்துக்கொண்டு தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். குன்னூரில் தனது பெற்றோருடன் வசித்துவந்த அழகுமீனாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 6 மாதமாக குன்னூரில் இருந்த அழகுமீனா கல்லூரி மாணவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இந்த விவரம் சவுந்தரபாண்டிக்கு தெரியவரவே மனைவியை கண்டித்தார். மேலும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறும் கூறினார்.


ஆனால் அதற்கு அழகுமீனா மறுத்து விட்டார். நேற்று முன்தினம் அழகுமீனா மர்மமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவர் சவுந்தரபாண்டி கொலை செய்தது தெரிய வரவே அவரை கைது செய்தனர்.

இந்த கொலையில் அழகுமீனாவின் கள்ளக்காதலரான கல்லூரி மாணவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அவரையும் தேடி வருகின்றனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post