டாக்டரின் தகவலால் குருகிராம் சிறுவனின் பெற்றோர்கள் அதிர்ச்சியில்... சிறுவனுக்கு நடந்தது என்ன?

டெல்லி அருகே குருகிராம் பள்ளியில் கொலை செய்யப்பட்ட சிறுவன், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி அருகே உள்ள குருகிராமில் சர்வதேச பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன் ஒருவன், கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியின் கழிவறையில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். மாணவன் இறந்து கிடந்த இடத்துக்கு அருகே இருந்த கத்தி போலீசாரால் கைப்பற்றப்பட்டது. 

மாணவனின் மர்ம சாவு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பள்ளி பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அந்த சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரியவந்திருப்பதாக பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் தீபக் மாத்தூர் கூறியுள்ளார்.

சிறுவனின் உடலில் வேறு எந்த காயமும் இல்லை. உடல் உறுப்புகளின் மாதிரிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த சோதனையில், பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான தடயங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது என்றும் டாக்டர் தீபக் தெரிவித்தார்.

இந்த கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சிறுவனின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post