நடராஜனை சசிகலா சந்திப்பதை தடுக்கிறார் தினகரன்: தீபக் திடுக் புகார்!!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை சசிகலா பரோலில் வந்து பார்ப்பதை டிடிவி தினகரன் தான் தடுக்கிறார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் எம். நடராஜன் சிகிச்சை பெற்று வருகிறார்

 அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

பரோலில் வராத சசிகலா
 இதனால் நடராஜனை பார்க்க சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வருவார் என கூறப்பட்டது. ஆனால் நடராஜனை பார்க்க சசிகலா விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி இருந்தன.

சசிகலா மறுப்பு
 இதனிடையே மருத்துவமனையில் நடராஜனுடன் இருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: மனைவி சசிகலாவை பார்க்க நடராஜன் விரும்புகிறார். ஆனால் சசிகலா பார்க்க மறுத்துவிட்டார்.


தியாகம் செய்த எம்.என்.
இதனால் நடராஜன் மிகவும் வேதனையில் இருக்கிறார். சசிகலாவுக்காக 33 ஆண்டுகாலம் தம்முடைய வாழ்க்கையை தியாகம் செய்தவர் நடராஜன்.

தடுக்கும் தினகரன்
 நடராஜனை சந்திப்பதால் சசிகலாவின் அரசியல் இமேஜ் பாதிக்கும் என தினகரன்தான் தடுத்து வருகிறார். இது எனக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு தீபக் கூறியுள்ளார்.
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post