4 சிறுமிகளை கற்பழித்ததாக மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது பரபரப்பு புகார்!!!

ஒடிசா மாநிலத்தில் கோராபுட் மாவட்டத்தில் மாவோயிஸட்டுகளை வேட்டையாடும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் மீது சிறுமிகளை கற்பழித்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது. கோராபுட்டில் வனப்பகுதியையொட்டி உள்ள சோரிஸ் பாடர் கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பகல் 12 மணி அளவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மத்தியப்படை வீரர்கள் 4 மாணவிகளையும் வழிமறித்து சில்மிஷத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை வனப்பகுதிக்குள் கடத்திச் சென்றனர். அங்கு மாணவிகளின் வாயை துப்பட்டாவால் பொத்தி கற்பழித்தனர். பின்னர் மாணவிகளை அங்கேயே தவிக்க விட்டு தப்பிச் சென்று விட்டனர்.


இதற்கிடையே மாணவிகள் திரும்பி வராததால் பெற்றோர்கள் தேடியபோது வனப்பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தனர். 4 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதில் ஒரு மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் சகோதரர் கூறும்போது, “தனது சகோதரியை மத்திய போலீஸ் படை வீரர்கள் கொடூரமாக கற்பழித்ததாக குற்றம் சாட்டினார்.

உள்ளூர் மக்களும் இதே குற்றச்சாட்டை கூறினார்கள். அதை அடிப்படையாக வைத்து ஒடிசாவில் உள்ளூர் டி.வி. சேனல்களில் செய்தி ஒளிபரப்பானது.இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post