தாயை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெருக வாழ்ந்தான் ஊராட்சி ஆவிடைதேவன்குளத்தை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (வயது 45).

இவரது மனைவி ரீட்டா (38). இவர்களது மகள் நித்யா (17). இவர் மன்னார்குடி அரசு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ரீட்டாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பானு என்பவருக்கும் சுயஉதவிக்குழு கடன் பெறுவது தொடர்பாக தகராறு இருந்துள்ளது.

சம்பவத்தன்று பானுவிடம் பணம் கேட்ட ரீட்டாவை தகாத வார்த்தையால் பானு திட்டியதை நித்யா தட்டி கேட்டு உள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், சுந்தர்ராஜ், விக்னேஷ் ஆகிய 3 பேரும் ரீட்டா, நித்யா ஆகிய 2 பேரையும் தாக்கி உள்ளனர். இதனை கண்டு அங்கு ஓடி வந்து முருகானந்தம் தட்டிகேட்டார்.

அப்போது ராஜேஷ் ரீட்டாவையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

தனது தாயை அவதூறாக பேசியதால் மனமுடைந்த நித்யா வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

உடனே அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிக்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நித்யா இறந்தார்.


இதுகுறித்த புகாரின் பேரில் பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், சுந்தர்ராஜ், விக்னேஷ், பானு ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் நித்யாவின் உடலை உறவினர்கள் ஊருக்கு கொண்டு வரும் வழியில் மன்னார்குடி- முத்துபேட்டை சாலை மரவாடி அருகே சாலையின் நடுவே உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது நித்யாவின் சாவிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் உடலை ஊருக்கு கொண்டு சென்றனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post