வி‌ஷ ஊசி போட்டு தொழில் அதிபர் தற்கொலை... பிண்னணியில் நடந்தது என்ன?

திருப்பூர் 15 வேலம் பாளையம் சொர்ணபுரி விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (51). தொழில் அதிபரான இவர் திருப்பூரில் 6 இடங்களில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். திருப்பூர் அண்ணாநகரில் இந்த பனியன் கம்பெனிகளின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

தொழில் அதிபர் சீனிவாசனுக்கு கடந்த ஒரு ஆண்டாக தொழிலில் அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டது. சுமார் ரூ. 30 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்து காணப்பட்டார்.

மேலும் தொழில் தொடர்பாக பல்வேறு இடங்களில் ரூ. 5 கோடி வரை கடனும் வாங்கியுள்ளார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

மேலும் தற்போது தீபாவளி பண்டிகை நெருக்குவதையொட்டி கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். அதோடு இல்லாமல் கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம், போனஸ் கொடுக்கவும் பணம் தேவைப்பட்டது.

இதனால் கடந்த 2நாட்களாக சீனிவாசன் மனஉளச்சலில் இருந்தார். நேற்று இரவு சோகத்துடன் வீட்டிற்கு வந்த சீனிவாசன் தனது அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை திறந்து கொண்டு அவரது அறைக்கு சென்றனர். அங்கு சீனிவாசன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகில் 2 ஊசி கிடந்தது.


இதையடுத்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் 15 வேலம்பாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது கடன் தொல்லை மற்றும் தொழில் நஷ்டம் காரணமாக தொழில் அதிபர் சீனிவாசன் வி‌ஷஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தற்கொலை செய்து கொண்ட சீனிவாசனுக்கு மோகனஸ்ரீ என்ற மனைவியும், பூஜா என்ற மகளும், ஸ்ரீநாத் என்ற மகனும் உள்ளனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post