நான்கு வயதில் பருவமடைந்த சிறுமி... அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!!

அவுஸ்ரேலியாவின்  நியூ சவுத் வேல்சை சேர்ந்த  4 வயது சிறுமிக்கு  மாதவிடாய் ஏற்பட்டு உடல்ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார்.

பிறக்கும்போது நல்ல ஆரோக்கியமாக பிறந்த இந்த சிறுமிக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே மார்பகங்கள் வளர்ந்து முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்துள்ளன. 4 வயதில்  மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. 

தற்போது  குறித்த சிறுமிக்கு 5  வயது எனினும்  பார்ப்பதற்கு மிகவும் முதிர்ச்சியடைந்து காணப்படுகிறார்.

இச் சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த சிறுமிக்கு Addison’s disease   எனும் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இந் நோய் குறிப்பாக இளம் வயது பெண்கள் அல்லது 30 வயது பெண்களுக்கு ஏற்படும். சில நேரங்களில் சிறு வயதிலேயே பெண்கள் பருவமடைவதற்கும் காரணமாகவும் அமைகின்றன.

தற்போது இந்த சிறுமிக்கு எடை அதிகரித்துள்ளதுடன்  இவரது உடம்பில் அதிகமாக முடி வளர்ந்து காணப்படுவதால்  பாடசாலைக்கு செல்வதற்கு சிரமப்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவரது உடலில் துர்நாற்றம் வீசுவதால் சிறு குழந்தைக்கான பருவத்தினை எனது மகளால் அனுபவிக்க முடியவில்லை இந்த சிறுமியின் தாய் கவலை வெளியிட்டுள்ளார்.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post