19 வயது இளம் பெண் தூக்கிலிட்டு தற்கொலை - வாட்ஸ் அப்பில் உருக்கமான ஸ்டேட்டஸ்!!!

ஐதராபாத்தில் தாய் திட்டியதால், 19 வயது இளம் பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா ஐதராபாத் நகரைச் சேர்ந்தவர் சாய் துர்கா மவுனிகா. சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், துண்டிகல் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டில் தாய், சகோதரருடன் தங்கி, பொறியியல் படிப்பில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், சாய்துர்கா சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதாக அவரது தாய் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சாய்துர்கா, கடந்த புதன்கிழமை அன்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக, தற்கொலை செய்வதற்கு முன் தன் வாட்ஸ் அப் ஸட்டேடஸில் உருக்கமான கருத்து ஒன்றை பதவிட்டிருந்தார்.

அதில்,


அண்மை காலமாக நான் சந்தோஷமாக இருக்கவே பயப்படுகிறேதன். நான் மகிழ்ச்சியாக இருக்கும் போது, மற்றவர்கள் என்னை பார்க்க விரும்புவதில்லை. என் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது’

இவ்வாறு சாய்துர்கா உருக்கத்துடன் கூறியிருந்தார்.

நடந்த சம்பவத்தை குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், துர்கா மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்றும், சின்ன சின்ன விஷயத்திற்குக் கூட தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் கூறினர்.

சாய்துர்காவின் மொபைல் மற்றும் சமூகவலைதள பதவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தவுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post